பயங்கரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்: தேவாலய பிரார்த்தனையில் தகவல்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (65)
Advertisement
love_jihad,ISIS,Kerala,church,கேரளா,சர்ச்,ஐஎஸ்,லவ்_ஜிகாத்

கொச்சி: கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் தேவலாயம் வெளியிட்ட அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள தேவாலயங்களில் நடந்த ஞாயிறு பிரார்த்னையின் போது, வாசிக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள, சைரோ மலபார் தேவாலயம், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், சமீபகாலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில், சிலர் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில பெண்கள், கொலை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள், சமூகத்தின் ஒருமைப்பாட்டுக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.





போலீசாரும், புலனாய்வு அமைப்பினரும், இதை, மத ரீதியான பிரச்னையாக அணுகாமல், சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக கருதி, சம்பந்தபட்ட நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சைரோ மலபார் தேவாலயத்தின் இந்த அறிக்கை, கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நேற்று நடந்த ஞாயிறு பிரார்த்னையின்போது, வாசித்து காட்டப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-ஜன-202017:31:36 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஸ்ஸ்ஸ்ஸ் சத்தமா சொல்லாதே இது கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் பற்றியது. யாரையும் தாக்கிட கூடாது.
Rate this:
Share this comment
Cancel
ராமதாசன் - chennai,இந்தியா
21-ஜன-202002:27:45 IST Report Abuse
ராமதாசன் எங்க நம்ம சுடலை / சைக்கோ / சைமன் ஒன்னும் சொல்ல காணோம்.. ஓ ஏதாவது சொன்ன சோலிய முடிச்சுப்புடுவானுவோ ..எல்லாத்தையும் மூடிட்டு இருக்க வேண்டியது தானான
Rate this:
Share this comment
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
21-ஜன-202000:22:44 IST Report Abuse
vivek c mani பணத்தையும் வன்முறையையும் பயன் படுத்தி மதத்தை நிலைநிறுத்தும் மற்றும் மதம் மாற்றும் எவரும் காலப்போக்கில் அதன் கெட்ட பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். மற்றும் எளிய அதிகம் படித்திராத, துன்ப நிலையில் உள்ளோர் மற்றும் இளம் வயதினரிடம் மூளை சலவை செய்து மதம் மாற்றுவது காலப்போக்கில் நிம்மதியை குலைக்கும். விரும்பி மதம் மாறுவது நிலையாகும். ஆனால் வருத்தி , ஆசை காட்டி மோசம் செய்யும் மதமாற்றம் நிலையில்லாதது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X