நிர்பயா குற்றவாளி பவன்குமாரின் மனு தள்ளுபடி

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (21)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளி பவன்குமார் குப்தா, தான் சிறார் எனக் கூறி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.





டில்லியில் 2012 ம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால், 2 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த முகாமில் இருந்த பிறகு விடுதலை செய்யப்பட்டான். மற்றொருவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டில்லி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து பல்வேறு கோர்ட்கள் மற்றும் டில்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சகம்,ஜனாதிபதி என அடுத்தடுத்து அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.




நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் கவனித்து வருகிறது.

இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் குப்தா, குற்றம் நடைபெற்ற போது தனது வயது 17 ஆண்டுகள் ஒரு மாதம் மற்றும் 20 நாட்கள். அதனால் தன் மீதான குற்றங்களை சிறார் சட்டங்களின் கீழ் விசாரணை நடத்த வேண்டும். 18 வயது நிரம்பாததால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தான்.

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் பெஞ்ச், இந்த விஷயத்தில் கோர்ட் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. குற்றம் நடந்த போது, தான் சிறார் என பவன் கோரிய மனுவில் முகாந்திரம் இல்லை. இதே மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது. இந்த மனுவை விசாரிக்க எந்த வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
20-ஜன-202022:45:03 IST Report Abuse
raghavan இன்னும் மூணு பேருக்கு கருணை மனு கடைசி நாளில் போட வக்கீலு வருவான். பதினாலு நாளைக்கு ஒருமுறை ஒவ்வொருத்தனா கருணை மனு போட்டாலும் மார்ச் மாதம் இவனுங்க ஆட்டம் க்ளோஸ்.
Rate this:
Share this comment
Cancel
Unmai Vilambi - Neelgiri,இந்தியா
20-ஜன-202022:19:48 IST Report Abuse
Unmai Vilambi கற்பழிப்பு செய்யும் அம்மா,அக்காவை அந்த மாதிரி செய்யும் சட்டம் வந்தால் இது குறையும்.
Rate this:
Share this comment
Cancel
Saravanan - Male,மாலத்தீவு
20-ஜன-202020:14:01 IST Report Abuse
Saravanan இன்னும் 10 நாள் எப்ப போகுமோ.. இந்த பாவிப்பசங்க அடுத்த மனு போட்டுடக்கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X