ஆந்திராவிற்கு 3 தலைநகர்: எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (6)
Advertisement
Andhra, Capital, PassesBill, JaganMohanReddy, ChandrababuNaidu, Assembly, CM, AndhraPradesh, ஆந்திரா, தலைநகர், மசோதா, ஜெகன்மோகன்ரெட்டி, சந்திரபாபுநாயுடு

அமராவதி: ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதா அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆந்திரா தலைநகர் அமராவதியை ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்திலான நகராக உருவாக்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக 2015ம் ஆண்டு விவசாயிகளிடம் 33 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
மேலும், அமராவதி நகரம் உருவாக்க சிங்கப்பூர் நாட்டின் உதவியுடன் திட்டம் வகுக்கப்பட்டு, பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்பின்பு, சந்திரபாபுவின் பல்வேறு திட்டங்களில் ஊழல் நடப்பதாக கூறி, அதனை மறுஆய்வு செய்யப்போவதாக அறிவித்தார். இதன்படி, சில திட்டங்களை நிறுத்தியதால், சந்திரபாபு கோபமடைந்தார்.




இந்நிலையில், கடந்த மாதம் ஜெகன்மோகன் வெளியிட்ட அறிவிப்பில், அமராவதியை தவிர்த்து மேலும் 2 தலைநகரங்கள் உருவாக்கப்படும், என அறிவித்தார். அதாவது, அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை செயல்பாட்டு தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும் அமைப்பதாக அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், 3 தலைநகரை உருவாக்குவதை சட்டமாக நிறைவேற்ற, சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று (ஜன.,20) முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. இதற்கு எதிராக போட்டி சட்டசபை நடத்த இந்திய கம்யூ., மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் முடிவு செய்துள்ளதால், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




இன்று நடைபெற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தில், ஆந்திர மாநில அதிகாரப் பரவல் மற்றும் முழுமையான வளர்ச்சி 2020 என்ற பெயரில் நிதியமைச்சர் ராஜேந்திரநாத் ரெட்டி மசோதா தாக்கல் செய்தார். அவர் பேசுகையில், ஆந்திராவின் அனைத்து மண்டலங்களும் பரவலான வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட உள்ளது, என்றார். அமராவதி நகருக்காக 33 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்து இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
King of kindness - muscat,ஓமன்
21-ஜன-202009:36:27 IST Report Abuse
King of kindness ஜெகன் மோகன் ரெட்டி ஒரு கலியுக துக்ளக். கட்டப்பஞ்சாயத்துக்கு நாலாவது தலைநகர் உண்டாக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
21-ஜன-202007:52:03 IST Report Abuse
oce ஆட்சிக்கு வரும்போது ஆளுக்காள் தலை நகரை இடித்து வேறொரு தலை நகரை கட்டி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறீர்கள். ஆந்திர ஆட்சியாளர்களுக்கு இதே வேலை. மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆந்திர மக்கள் தமிழ். மக்களை விட பின் தங்கி இருப்பதற்கு இவர்கள் தான் காரணம். பெரும்பாலான ஆந்திர மக்கள் தமிழகத்தின் வட பகுதிகளில் குடியேறி தமிழக ஆட்சியினரால் முன்னேறி உள்ளனர். இதை யார் கவனிப்பது.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-202020:14:12 IST Report Abuse
Tamilan சந்திரபாபு எதிர்பார்த்ததுபோல் மத்தியில் இருந்து பண மழை கொட்டவில்லை . எனவே அவரின் திட்டம் ஒன்றுக்கும் உதவாது . தற்போதைய நிதியமைச்சர் அனைத்துக்கும் ஒரு படி மேலே சென்று பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும்தான் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியும். இனியொரு குண்டை தூக்கிப்போட்டு தான் பொறந்த மாநிலத்தையும் தூக்கி கண்காணாத இடத்தில எறிந்துவிட்டு தன எஜமான்களின் காலடியில் விழுந்து கிடக்கிறார் . விழுந்து கிடந்தாள் கூட தூக்கிவிட்டு விடலாம் . ஆனால் தன பதவி சாதியிஸம் ஆகியவைகளை காக்க விழுந்தது போல் நடிப்பசர்களை இனியும் ஐந்தாண்டுகளுக்கு எழுப்ப முடியாது . எனவே, சந்திரபாபு போட்ட திட்டமெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று . இந்த ஜென்மத்தில் நடக்க முடியாத ஒன்று .
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
20-ஜன-202020:47:24 IST Report Abuse
uthappaஇதில் ஒரு மன மகிழ்சி உனக்கு, அவர் பிறந்த மாநிலம் தமிழ்நாடு, யார் காலிலும் விழா வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.குடும்ப அரசியல் செய்யும் கட்சியில் அவர் இல்லை.ஜாதியும், மதமும் உனக்கே உரிய வெறி.திருந்தாதே அப்படியே இரு, மனம் புழுங்கி தூங்காமல் இரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X