பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை விமானப்படைத்தளத்தில் 6 சுகோய் போர் விமானம் சேர்ப்பு

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (6)
Advertisement
Thanjavur, SUKHOI_30MKI, FighterJets, BipinRawat, தஞ்சாவூர், சுகோய்30, போர்விமானம், பிபின்ராவத்,

இந்த செய்தியை கேட்க

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் அதிநவீன சுகோய் - 30 MKI ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன.

இந்திய பெருங்கடலில் அண்டை நாடுகளின் கப்பல்கள் அத்துமீறி உலா வருவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையிலும், கடல் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, தஞ்சாவூரில் 1940ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, பிறகு பயன்படுத்தப்படாமல் இருந்த விமானப்படை தளத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தி சீரமைத்தது. அந்த தளத்தில் 4ம் தலைமுறை போர் விமானமான சுகோய் - 30 MKI ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன.


இதற்காக, சுகோய் விமானம் வருகையின் போது, இருபுறங்களிலும் நீர் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பேசியதாவது:

தெற்கு தீபகற்ப பகுதியில் பாதுகாப்பு ரீதியில் தஞ்சாவூர் முக்கிய இடத்தில் அமைந்திருப்பதாகவும், இங்கிருந்து கொண்டு இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா கடல் பகுதி ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்திய கடற்படை கப்பல்களுக்கும், இந்திய ராணுவத்தின் தரைப்படைகளுக்கும் தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தில் இருக்கும் போர் விமானங்கள் மூலம் போதிய உதவிகளை அளிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


விமானப்படை தலைமை தளபதி பதேரியா கூறுகையில், சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்ட பிறகு, அதன் வலிமை பலமடங்கு அதிகரித்துள்ளது. கடலோர பாதுகாப்பு பணியில் இரண்டையும் ஈடுபடுத்த இருப்பது சரியான முடிவு, என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி காவிரி பாயும் தஞ்சையில் விவசாய நிலங்களை அழித்து விமானப்படை நிலையமா. அதுவும் சுகாய் போர் விமானம் வந்து போகுமா. சத்தம் தாங்க முடியாதே. மார்க்கம் தொழும் போது எப்படி சத்தம் போடுவதை அனுமதிக்க முடியும். தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது. கட்டுமரம் போனபின்பு கேட்பதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்டதா. பிரியாணி கூட்டம் என்ன செய்கிறார்கள். வைகோ எங்கே போனார். விழித்தெழு தமிழா.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
20-ஜன-202022:16:51 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக -வின் மோதி ஆட்சியில் ஆறே ஆண்டுகளில் புத்துயிர் பெற்றுள்ளது தஞ்சை விமானப்படைத்தளம் ..... பாராட்டுக்கள் ...... கோ பேக் மோதி ...... ஆனா உங்க திட்டம் வேணும் .....
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
20-ஜன-202021:04:48 IST Report Abuse
Krishna Ideal Location for Well Defended Major Airforce Base in Deep South Should Have Been in Tirunelveli For all Air Operations (Defence-Strike) on Entire Deep South East & S-West- Apart from Andaman & Lakshwadeep Bases
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X