கவர்னரை சந்தித்தார் முதல்வர் உத்தவ்: ஷீரடி சாய்பாபா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (5)
Advertisement
#mumbai# #Uddhav# #Governer# கவர்னரை, சந்தித்தார், முதல்வர் உத்தவ்

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிராவில் ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. ஜன.,9 ம் தேதியன்று அவுரங்காபாத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் 'சாய்பாபா பிறந்த இடமான, பர்பானி மாவட்டம் பாத்ரியில், ரூ.100 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, சாய்பாபா கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.'சாய்பாபா பிறந்த ஊர் குறித்து எந்த குறிப்பும், ஆதாரமும் இல்லை' என, அவர்கள் கூறியுள்ளனர்.





'உத்தவ் தாக்கரேயின் பேச்சைக் கண்டித்து, ஷீரடியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று துவங்கியது. கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், தனியார் போக்குவரத்து செயல்படவில்லை.அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடந்தது.


கவர்னரை சந்தித்தார் உத்தவ்


இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்.முன்னதாக ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சமஸ்தான் டிரஸ்டின் முன்னாள் நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து பேசிய நிலையில் இன்று முதல்வர் உத்தவ் சந்தித்தார். அப்போது சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-ஜன-202011:37:51 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்த குழப்பம் தேவை இல்லாதது . நாட்டில் மக்கள் என்ன நம்புகிறார்கள் என்று மட்டுமே பார்க்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
21-ஜன-202004:55:42 IST Report Abuse
vasumathi 100 ஆண்டுக்கு முன்பு இருந்த சாய் பிறந்த இடம் தெரியாதபோது 2 யுகம் முன்பு வாழ்ந்த Raman இடம் அயோத்தி என்று தெந்தும் சிலர் சாட்சி கேட்கின்றனர். நல்ல வேலை. நல்லதே நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜன-202019:38:41 IST Report Abuse
mrsethuraman  ஜெய் சாய் ராம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X