பா.ஜ.,வின் தேசிய தலைவரானார் நட்டா: தட்டிக் கொடுத்து அமித்ஷா வாழ்த்து

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (5+ 11)
Advertisement
பாஜ,  தேசியதலைவர், ஜேபி நட்டா, நட்டா, பிரதமர்மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங்,

பா.ஜ.,வின் தேசிய தலைவராக, அக்கட்சியின் செயல் தலைவரான ஜே.பி.நட்டா, போட்டியின்றி, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அடுத்தபடியாக, பா.ஜ.,வின் மூன்றாவது அதிகாரம் மிக்க தலைவராக, அவர் உருவெடுத்துள்ளார்.
கடந்த, 2014ல் பிரதமர்நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது, பா.ஜ., தலைவராக, ராஜ்நாத் சிங் இருந்தார். அவர், மத்தியஅமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, உள்துறை அமைச்சராக்கப்பட்டார்.இதனால், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில், அமித் ஷா, பா.ஜ.,வின் தேசிய தலைவரானார். 2019 தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றதை அடுத்து, அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சரானார்.

ஆனாலும், தலைவர் மாற்றம் உடனடியாக நிகழவில்லை. மாறாக, ஜே.பி.நட்டா செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவர் கட்சிப் பணிகளை கவனித்து வந்தார்.இந்நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல்கள் எல்லாம் முடிவுக்கு வந்தன. பெரும்பாலான மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேசிய தலைவருக்கான தேர்தல், முறைப்படி துவங்கியது.

அதன்படி, வேட்புமனு தாக்கலுக்கான தேதி, நேற்று குறிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, காலை, 10:00 மணிக்கு, தலைமை அலுவலகத்தில், தலைவர்கள் குவியத் துவங்கினர். காலை, 11:00 மணியளவில், நட்டா, தன் மனைவி மல்லிகாவுடன் தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். எதிர்பார்த்ததைப் போலவே, தேசிய தலைவர் பதவிக்கு, நட்டா மட்டுமே, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நட்டாவின் பெயரை முன்மொழிந்தனர். இதனால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைவர் முன்னிலையிலும், புதிய தலைவர் தேர்வை, அகில இந்திய பொதுச் செயலர் புபீந்தர் யாதவ் அறிவித்தார்.தலைவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அமித் ஷா, நட்டாவிற்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.

புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ''நட்டாவின் தலைமையில், பா.ஜ., மென்மேலும் பலம் பெற்று உயரும். கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர் என்பதால், நட்டா, அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வார்,'' என்றார்.

தன் கணவர், பா.ஜ.,வின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து, மல்லிகா நட்டா கூறியதாவது:என் வாழ்வின், மிக முக்கியமான நாள். சிறிய மாநிலமான, ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து வந்துள்ள ஒரு நபரிடம், இவ்வளவு பெரிய பொறுப்பை, பா.ஜ., ஒப்படைத்துள்ளது, மகிழ்ச்சியை தருகிறது. எங்கள் குடும்பத்தினர்சார்பாக மட்டுமல்லாது, எங்களது சொந்த ஊரான பிலாஸ்பூர் மக்கள் சார்பாகவும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.,வின் அதிகார வரிசையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்டுமே, இருந்தனர். அந்த வரிசையில், ஜே.பி.நட்டா, தேசிய தலைவராக தேர்வாகியிருப்பதன் மூலம், அதிகாரம் மிக்க மூன்றாவது நபராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய பொறுப்பை ஏற்றுள்ள நட்டாவுக்கு வாழ்த்துக்கள். அவர் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். எப்போதும் ஒழுக்கத்தை பேணுபவர். கட்சியின் வளர்ச்சியில், ஆரம்ப காலத்தில் இருந்தே முக்கியப் பங்கு வகிப்பவர். அவரின் மரியாதைக்குரிய இயல்பு, அனைவரும் அறிந்ததே. இவருடைய பதவி காலத்தில்,பா.ஜ., பல புதிய உயரங்களை தொடும் என, உறுதியாக நம்புகிறேன்.

நரேந்திர மோடி,

பிரதமர் .

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (5+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
21-ஜன-202016:16:23 IST Report Abuse
Suri இன்னுமொரு தலையாட்டி பொம்மை. மீறி செயல்பட்டால் பங்காரு லட்சுமணனுக்கு நேர்ந்த கதி தான்....அமித் ஷா இன்னும் எதனை பொம்மைகளை உருவாக்குவார்??
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஜன-202016:11:29 IST Report Abuse
ஆரூர் ரங் நட்டாத்துல தவிக்கிற கான்கிராஸ் நட்டாவால் நடுக்கடலில் விழப்போகுது
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஜன-202011:26:18 IST Report Abuse
ganapati sb ulagin migapperum katchiyin thalaivaranaarana nattavirku vaalthukkal
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X