'அல்வா' நிகழ்ச்சியுடன் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (18+ 41)
Advertisement
அல்வா, நிகழ்ச்சி,மத்திய_பட்ஜெட், அச்சிடும்பணி, துவக்கம்

புதுடில்லி :நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி, சம்பிரதாயமான, 'அல்வா' கிளறும் நிகழ்ச்சியுடன், நேற்று துவங்கியது.

நடப்பு, ௨௦௨௦ - ௨௧ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பார்லி.,யில் பிப்.,௧ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்த பின், பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் அச்சிடப்படும். பட்ஜெட் அச்சிடும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அதன் ரகசியத்தை காக்க, பார்லிமென்டில் தங்குவது மரபு. இவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்படும். இந்த பணிகள், அல்வா கிளறும் நிகழ்ச்சியுடன் துவங்கும்.

இதன் படி, அல்வா கிளறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பங்கேற்று, சம்பிரதாயப்படி, அல்வா கிளறினார். இதில் கலந்து கொண்ட நிதித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அல்வா வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மத்திய பட்ஜெட் அச்சிடுதல் பணிகளுடன், நேரடி தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும், பார்லிமென்டின் வடக்கு பிளாக் பகுதிக்கு சென்றனர். அச்சிடும் பணி முடியும் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருப்பர்.

Advertisement
வாசகர் கருத்து (18+ 41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜன-202020:26:05 IST Report Abuse
ஆப்பு ஆ கயா ஆ. கயா அல்வா வாலா ஆ க யா...வந்துட்டார்... வந்துட்டார்... அல்வா குடுக்க வந்துட்டார்...
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஜன-202019:12:56 IST Report Abuse
Girija பேசாம பச்சை மொளகா சட்டினி கொடுக்கலாம், போனவாட்டி பெட்ரோல் விலையில் கை வைத்தாகிவிட்டது, வங்கியில் சேமிப்புக்கு வட்டி குறைத்தாகிவிட்டது. ஜி எஸ் டி அரசுக்கு போகுதோ இல்லையோ எங்களிடம் வசூலித்தாகிறது , ரயில்வே கட்டணம் டோல் கேட் கட்டணம் உயர்த்தியாச்சு. நல்ல வேளை சேலம் எட்டு வழி சாலை வரவில்லை இல்லையென்றால் அங்கும் டோல் கேட்டிற்கு அழவேண்டியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-ஜன-202016:23:49 IST Report Abuse
Indhuindian This ritual should be seen more as a motivation of those who would be completely cut off from the rest of the world - No communication whatsoever - No phones- No mobile Phones- No contact with the outside world - This is similar to solitary confinement at least in case of solitary confinement they see the sunlight But the printing of the Budget is held in underground press. Just imagine the hardship gone by these people at all levels from Office boy to the Secretary to Government of India. It is easy to put in criticism. Put yourself in a room for a week alone with no contact with outside world then you would realise what it means to be under that condition. This has been going on for several decades. People were not aware or did not bother to know about this. Those who put in harsh comments- what were you doing during Congress regime?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X