பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜன 20, 2020
Advertisement
   இதே நாளில் அன்று

ஜனவரி, 21, 1924 மது தண்டவதே:

மஹாராஷ்டிர மாநிலம் அஹமது நகரில், 1924 ஜனவரி, 21ல் பிறந்தார். இயற்பியல் பேராசிரியராக பணியை துவக்கினார். மஹாராஷ்டிர மாநிலம் அமைய போராடிய, 'சம்யுக்தா மஹாராஷ்டிரா' என்ற, இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.'பிரஜா சோசலிஷ' கட்சியில் சேர்ந்த இவர், அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலரானார். 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றவர். 1970 - -- -71ல், மஹாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினரானார். 1975ல், நெருக்கடி காலத்தில், இவர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு மற்றும் ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். 1971 முதல், 1990 வரை, தொடர்ந்து ஐந்து முறை, எம்.பி.,யாக இருந்தவர்.ஜனதா கட்சியை சேர்ந்த, மொரார்ஜி தேசாய் தலைமையிலான, மத்திய கூட்டணி ஆட்சியில், ரயில்வே அமைச்சராகவும், பிரதமராக இருந்த, வி.பி.சிங் தலைமையிலான, ஜனதா தள கூட்டணி ஆட்சியில், நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர். 1990ல், திட்டக் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்தார். 2005 நவம்பர், 12ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X