அரசியல் செய்தி

தமிழ்நாடு

உழைத்தால் உயர்ந்த இடத்திற்கு வரலாம்! : இ.பி.எஸ்., அறிவுரை

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (29)
Advertisement
உழைத்தால், உயர்ந்த_இடம், வரலாம்,இபிஎஸ்., அறிவுரை

சென்னை:''கட்சியில் சிறப்பாக உழைத்ததால், நாங்கள் உயர்ந்துள்ளோம். அதேபோல், நீங்கள் சிறப்பாக உழைக்கும்போது, எதிர்காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வின், ஜெ., பேரவை சார்பில், ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம், நேற்று, கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பேரவை செயலரான அமைச்சர் உதயகுமார், தலைமை வகித்தார்.

கூட்டத்தில், துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., பிறந்த நாளை, எப்போதும் போல், இந்த ஆண்டும் சிறப்பாக நடத்த வேண்டும். அவர் பிறந்த நாளில், 'ஏழைகளின் இல்லம் தேடி சென்று, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்' என, அவர் இருக்கும்போதே, ஆலோசனைகள் வழங்கினார்.
அவர் கொள்கையை, நம் இதயங்களில் ஏந்தி, ஏழைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். மருத்துவ முகாம்கள், இலவச திருமணங்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள், ரத்ததானம், கண்தானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான இ.பி.எஸ்., பேசியதாவது:ஜெ., தன் நோயைக் கூட பொருட்படுத்தாமல், மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். அவர் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்.அனைத்து பகுதிகளிலும்,ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவ வேண்டும். முதியோருக்கு வேஷ்டி, சேலை; பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம் வழங்குங்கள்; அன்னதானம் செய்யுங்கள்.

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, பழங்கள், பால், பிரட் வழங்கலாம். மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை செய்யலாம். இதுவே, ஜெ.,க்கு நாம் செய்யும் நன்றி. ஜெ., உழைப்பால், நாம் நிமிர்ந்து நிற்கிறோம்.
அரசு திட்டங்களை, மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். பேரவை நிர்வாகிகள், கட்சிக்கு இதயம் போன்றவர்கள். தன்னலமற்று சேவை செய்ய வேண்டும். பேரவையில் சிறப்பாக உழைத்ததால், நாங்கள் உயர்ந்துள்ளோம். அதேபோல், நீங்கள் உழைக்கும்போது, எதிர்காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில், தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களுக்கு முடிவு கட்ட, அரசின் சாதனைகளை, திண்ணை பிரசாரம், தெரு முனைக் கூட்டம், பொதுக்கூட்டம், பேரணி வழியே, மக்களிடம் எடுத்துரைத்து, 2021 சட்டசபை தேர்தலிலும், கட்சி வெற்றி பெற உழைப்பது என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் ரொக்கம் அளித்தது, புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்கியது, நீர் வள திட்டங்களை செயல்படுத்தியது போன்றவற்றுக்காக, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
21-ஜன-202022:10:16 IST Report Abuse
Rajas ரோடு போடுறவன், பள்ளம் வெட்டுகிறவன், வீடு வேலை செய்யும் பெண்மணிகள், பால் பாக்கெட் போடும் வயதானவர்கள் எல்லாம் தான் கடுமையாக தான் உழைக்கிறார்கள். ஆனால் அரை வயிறு தான் நிறைகிறது.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
21-ஜன-202021:16:14 IST Report Abuse
Rajas தமிழ் நாடு பைபர்நெட் கார்பொரேஷன் என்ற நிறுவனத்தின் 2400 கோடி ரூபாய் டெண்டர் விவகாரம் என்ன என்று தினமர் விசாரித்து எழுத வேண்டும். தங்களுக்கு வேண்டியவருக்கே காண்ட்ராக்ட் தர வேண்டும் என்று அந்த துறையின் IAS அதிகாரிக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் தருகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-202020:27:26 IST Report Abuse
ஆப்பு கூழைக் கும்பிடு போடறதுக்கும் உழைக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X