அரசியல் செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க., தீவிரம்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020
Advertisement
 நகர்ப்புற, உள்ளாட்சி, தேர்தல், அதிமுக., தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்   வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க., தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணியை, அ.தி.மு.க., துவக்கி உள்ளது.

கடந்த மாதம், 27 மாவட்டங்களுக்கு மட்டும் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியை விட, குறைவான இடங்களையே, அ.தி.மு.க., கூட்டணி பிடித்தது. எனினும், மறைமுக தேர்தலில், சுயேச்சை மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களை இழுத்து, அதிக அளவில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை, அ.தி.மு.க., கைப்பற்றியது.அதையடுத்து, மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என, நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும், தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த தேர்தலுக்கு, ஆளும் கட்சியான அ.தி.மு.க., ஆயத்தமாகி வருகிறது. ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு, மாவட்ட செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களில் சிலர், தங்கள் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மட்டும், 'சீட்' வழங்கியது, பல இடங்களில், தோல்விக்கு வழிவகுத்தது. மேலும், கூட்டணி கட்சிகளுடன் உரசல் ஏற்படுத்தவும் செய்தது.
இது போன்ற பிரச்னைகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்படக் கூடாது என, அ.தி.மு.க., தலைமை கருதுகிறது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' கொடுக்க விரும்புவோர் பட்டியலை ஒப்படைக்கும்படி, மாவட்ட செயலர்களுக்கு, கட்சி தலைமை உத்தரவிட்டது.அதை ஏற்று, அனைத்து மாவட்ட செயலர்களும், வேட்பாளர்கள் பட்டியலை வழங்கி உள்ளனர். வேட்பாளர் பட்டியலுடன், கூட்டணி கட்சிகளுக்கு, எந்த இடங்களை வழங்கலாம் என்ற பட்டியலையும் கேட்டு பெற்றுள்ளனர்.

மாவட்ட செயலர்கள் அளித்துள்ள பட்டியல் அடிப்படையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை, அ.தி.மு.க., தலைமை துவக்கி உள்ளது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ததும், கூட்டணி கட்சிகளுடனான பேச்சு துவங்கும் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X