63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மத்திய பட்ஜெட்டை விட அதிகம்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (10+ 41)
Advertisement
Busget, இந்திய கோடீஸ்வரர்கள், சொத்து, மத்திய_பட்ஜெட்

டாவோஸ்: இந்தியாவைச் சேர்ந்த, 63 பெருங் கோடீஸ்வரர்களிடம், மத்திய பட்ஜெட்டை விட அதிக சொத்து உள்ளதாக, 'ஆக்ஸ்பம்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின், டாவோஸ் நகரில், நேற்று, சர்வதேச பொருளாதார மாநாடு துவங்கியது. இதையொட்டி, ஆக்ஸ்பம் நிறுவனம், இந்தியா தொடர்பாக, 'அக்கறை எடுக்க வேண்டிய நேரம்' என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018--19ம் நிதியாண்டில், மத்திய அரசின் பட்ஜெட் தொகை, 24 லட்சத்து, 42ஆயிரத்து, 200 கோடி ரூபாய்; இந்தியாவைச் சேர்ந்த பெருங் கோடீஸ்வரர்கள், 63பேரிடம் உள்ள சொத்துக்கள், இந்த பட்ஜெட்டை விட அதிகம்.ஏழை - பணக்காரர் இடைவெளியை குறைக்க, தீவிரமான அரசியல் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். இல்லாவிடில், இரு தரப்பினர் இடையிலான வித்தியாசம் அதிகரிக்கும். ஒரு சில நாடுகள், இதில் கவனம் செலுத்தி வருகின்றன.கடந்த, 30 ஆண்டுகளில், உலகளவில், ஏழை - பணக்காரர் இடைவெளி குறைந்துள்ளது. ஆனால், பல நாடுகளில், குறிப்பாக, முன்னேறிய நாடுகளில், வரலாறு காணாத அளவிற்கு, இடைவெளி அதிகரித்துள்ளது.

சாதாரண மக்கள், குறிப்பாக, ஏழை பெண்கள் மற்றும் சிறுமிகளின் உழைப்பை உறிஞ்சி, வசதி படைத்த செல்வந்தர்கள் மேலும் சொத்துக்களை சேர்க்கின்றனர். இதனால், ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத் தாழ்வு, மேலும் அதிகரிக்கிறது.

ஓராண்டில், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஈட்டும் ஊதியத்தை போல, வீட்டு வேலை செய்யும் சாதாரண பெண் சம்பாதிக்க, 22 ஆயிரத்து, 277 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.அந்த அதிகாரி பத்து நிமிடத்துக்கு ஈட்டும் ஊதியத்தை பெற, அப்பெண், ஓராண்டு உழைக்க வேண்டியிருக்கும்.

இன்றைய பொருளாதார சூழலில், பெண்கள்தான் மிகக் குறைவான ஊதியம் பெறுகின்றனர். அவர்கள், கோடிக்கணக்கான மணித்துளிகளை, சமையல் செய்வதற்கும், துணி துவைப்பதற்கும், குழந்தைகள் மற்றும்பெரியோர்களை பராமரிப்பதற்கும் செலவிடுகின்றனர். அவர்கள், ஊதியமில்லா உழைப்பை வழங்கி, நாட்டின் பொருளாதாரம், வணிகம் மற்றும் சமூகம் எனும் வண்டி ஓடுவதற்கு, மறைமுகமான, 'இன்ஜின்' போல விளங்குகின்றனர். ஒவ்வொரு நாளும், இந்திய பெண்களும், சிறுமிகளும், 326 கோடி மணி நேரம், ஊதியமின்றி உழைக்கின்றனர்.இந்த வகையில், அவர்கள், இந்திய பொருளாதாரத்திற்கு, ஓராண்டில், 19 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்கெடுக்கின்றனர். இது, 2019ம் பட்ஜெட்டில், கல்வித் துறைக்கு ஒதுக்கிய, 93 ஆயிரம் கோடி ரூபாயை விட, 20 மடங்கு அதிகம்.

உலக நாடுகள், பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த வரி விதிக்கின்றன; அவர்களிடம் இருந்து வரி வருவாயை முழுமையாக பெறவும் தவறுகின்றன. அவ்வாறு இல்லாது இருந்தால், பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டலாம். அத்துடன், வறுமை ஒழிப்பு மற்றும் ஏழை-பணக்காரர் வேறுபாட்டை குறைக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10+ 41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஜன-202016:15:41 IST Report Abuse
ஆரூர் ரங் கொரியாவின் ஜி டி பி இல் சாம்சங் எனும் ஒரே ஒரு கம்பெனியின் பங்களிப்பு பெரியப்பங்கு அதற்காக அவர்கள் பெருமைதான்படுகிறார்கள். இந்தியாவில்தான் லாபம் என்பது ஒரு பாவச்சொல்லாகப் பார்க்கப்படுகிறது .இன்றும்கூட எத்தனையோ நேர்மையான தொழிலதிபர்கள் லஞ்ச லாவண்யமில்லாத நாட்டையே விரும்புகிறார்கள் .அரசியல் குடும்பங்கள் வியாபாரத்தில் இறங்கியதால்தான் குளறுபடிகளே
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-202015:13:14 IST Report Abuse
தமிழன் இதில் கலைஞரின் குடும்ப சொத்து மாறன் சகோதரர்களின் குடும்ப சொத்து சோனியாவின் குடும்ப சொத்து சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் அவர்களின் குடும்ப சொத்து எல்லாம் அடங்கும் தானே?
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
21-ஜன-202008:48:17 IST Report Abuse
Pandiyan இந்தியாவின் பொருளாதர மந்த நிலைக்கு இதுவும் ஒரு காரணம்..நாட்டின் செல்வங்கள் ஒருபக்கமாக சிலரிடம் ஒதுங்குவது மிகவும் ஆபத்தான விஷயம் .. சுவாமி சொல்லுவது போல இந்த ஆட்சியர் யாருக்கும் பொருளாதாரத்தை சமசீராக கொண்டுபோக தெரியவில்லை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X