‛அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்'

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (35)
Advertisement

டாவோஸ்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்து வரும் இரு ஆண்டுகளில் சரிவை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.






சுவிஸ் நாட்டின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார ஆய்வு தொடர்பாக நடந்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது, ‛ இந்தியா அடுத்து வரும் இரு ஆண்டுகளில் வங்கி சாரா நிதித்திறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் மற்றும் குறைவான கிராமப்புற வருவாய் காரணமாகவும் பொருளாதார சரிவை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சரிவானது சந்தை பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டில் 4.8 சதவீதமாகவும், 2020ம் ஆண்டில் 5.8 சதவீதமாகவும், 2021ல் அது 6.5 சதவீதமாகவும் இருக்கும் வகையில் எதிர்பார்க்கப்படுகிறது.





சீனா மற்றும் அமெரிக்காவினிடையே ஏற்பட்டுள்ள முதற்கட்ட ஒப்பந்தம் காரணமாக உலக அளவில் பொருளாதார சரிவுக்கு அதிகம் வாய்ப்பில்லை. உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2019 ம் ஆண்டு 2.9 சதவீதமாகவும், 2020ல் 3.3 சதவீதமாகவும். 2021ல் 3.4 ஆகவும் இருக்கும் . இந்நிலையில் புத்தாண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் புவிசார் பிரச்னைகள் , தட்பவெப்பநிலை மாறுதல் நிலவி வருகிறது' இவ்வாறு கீதா கோபிநாத் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
22-ஜன-202011:45:44 IST Report Abuse
prakashc இந்திய மீதுதான் எல்லா நாடு எகானாமிஸ்ட்டுக்கும் கண் என்றால் இந்த 2020 ஆண்டு இந்திய உலகளவில் அனைத்து வளங்களையும் கொண்டுள்ளது. அதை அழிக்க தன இந்த குள்ள போட்ட முல்லாக்கள் நாட்டை நாசம் செய்ய துடிக்கிறார்கள் .இந்த பெண் கூறுவதும் அந்த பொறாமையில் தான்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜன-202016:44:29 IST Report Abuse
Endrum Indian உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2019 ம் ஆண்டு 2.9%, 2020ல் 3.3%, 2021ல் 3.4% ஆகவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டில் 4.8%, 2020ம் ஆண்டில் 5.8%, 2021ல் அது 6.5% இருக்கும்????அப்போ எங்கேம்மா இந்திய பொருளாதார சரிவு???2021 ல் ஒரு வார்த்தைக்கு 6.5% கணித்தது எவ்வளவு ஆகும் 4.5% ஆகும் என்று சொல்லவருகின்றாயா அது உலக பொருளாதாரத்தை விட அதிகம் தானே???கொழந்தே ஒனக்கு பணம் கொடுத்து சாவி கொடுத்து வைத்துள்ளதால் உளறுகின்றாய் என்று நன்கு தெரிகின்றது.
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-202015:09:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தியா 2024 ஆண்டுவரை பொருளாதார சரிவை சந்திக்கும் , 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும்போது இந்தியா பொருளாதாரம் உச்சத்தில் இருக்கும் , அதன் மூலம் மக்கள் அனைவருக்கும் மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஓசி பென்சன் கொடுக்க வாக்குறுதி கொடுக்கப்படும் , காங்கிரஸ் இந்த தகவலை உறுதி செய்யும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X