பொது செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோதமாக நிலத்தடிநீர் கொள்ளை அறிக்கை அளிக்க ஆவடி போலீசுக்கு உத்தரவு

Added : ஜன 21, 2020
Share
Advertisement

சென்னை: ஆவடி அருகில் உள்ள கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுத்தோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்து, ஆவடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆக்கிரமிப்புதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி தாலுகாவில் உள்ள கோனாம்பேடு, நாராயணபுரம் கிராமங்களில், சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுக்கப்படுவதை தடுக்க கோரியும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், கோனாம்பேடு கிராம பொதுநல சங்கம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என, அவமதிப்பு மனுவை, பொதுநல சங்கம் தாக்கல் செய்தது.வழக்கு பதிவுமனு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட, ஐந்து ஆழ்துளை கிணறுகளை மூடி விட்டதாகவும், செந்தில்குமார், ஜெயகுமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில், மசூதி இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இருவர் மீது, ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, நாளை, ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X