மத்திய அரசின் ஆபத்தான விளையாட்டு: மம்தா

Added : ஜன 21, 2020 | கருத்துகள் (28)
Advertisement
NRC,CAB,CAA,MamataBanerjee,மம்தா,மம்தாபானர்ஜி,Mamata

கோல்கட்டா: 'தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த விஷயத்தில், மத்திய அரசு, ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த விஷயத்தில், மத்திய அரசு, ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. பா.ஜ., அல்லாத ஆட்சி நடக்கும் மாநில அரசுகள், இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். அவர்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பங்கெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இதன் நிபந்தனைகள் மிகவும் மோசமானவை. இதில், பெற்றோரின் பிறப்பு தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இது, தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு முன்னோடி நடவடிக்கை என்பது உறுதியாக தெரிகிறது.





குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஜன-202020:02:12 IST Report Abuse
S.Baliah Seer தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்காக தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் அரசியல்வாதிகள்தான் . அலுவலகங்களில் நேர்மையான ,திறமையான அதிகாரிகளை ஓரங்கட்டுவதில் இருந்து அவர்களை வாழவிடாமல் செய்பவர்களும் அரசியல்வாதிகளே.ஊழல் அதிகாரிகளுக்கு ராஜ மரியாதை.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-ஜன-202018:49:46 IST Report Abuse
Sivagiri பாகிஸ்தான் , பங்களாதேஷ், உள்பட பெரும்பாலான நாடுகள் சிட்டிசன்ஷிப் ஐடி கார்ட் வழங்கி விட்டார்கள் அந்த ஐடி கார்ட் இருந்தால்தான் அந்த நாட்டின் பிரஜை இந்தியாதான் கடைசி கன்வெர்ட்டிங் கிறிஸ்டின் குரூப் கம்யூனிஸ்ட் போர்வையில் எதிர்க்கின்றன - முஸ்லிம்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டுகின்றன - அகதிகளை ஓட்டாக மாற்ற பிராந்திய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சிக்கின்றன - முஸ்லீம் கட்சிகள் இதை தங்களின் லாபத்திற்காக பக்டிக் காயாக பயன்படுத்துகின்றன . . . ஜனாதிபதியின் உத்தரவை யாரும் மீறமுடியாத படி சட்டம் இயற்ற வேண்டியது அவசியம் . . . மேலும் இந்த அம்மணி பிராந்திய உதிரி கட்சிகளின் தலைவி ஆக பல வழிகளில் பகீரத முயற்சி செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Pasupathy - hyderabad,இந்தியா
21-ஜன-202016:47:45 IST Report Abuse
Venkatesan Pasupathy மியான்மர் மற்றும் பங்களாதேஷ் இடங்களில் இருந்து வந்தவர்களை கொல்கத்தாவில் வைத்து சாப்பாடு போடட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X