டில்லியை லண்டனாக மாற்ற முடியாது: கம்பீர்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (12)
Advertisement
GautamGambhir,AAP,Delhi,London,BJP, டில்லி,கம்பீர்,ஆம்ஆத்மி,பாஜ, லண்டன்

புதுடில்லி: 'நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எதிர்கட்சிகள் அளிக்கின்றன. டில்லியை லண்டனாக மாற்ற முடியாது' என பா.ஜ., எம்.பி., கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் டில்லி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள், சுத்தமான குடிநீர், பஸ் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் அவரால் எதையும் நிறைவேற்ற முடியாது.

டில்லி சட்டசபை தேர்தலில், நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே, பா.ஜ., அளிக்கும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. 'டில்லியை லண்டனாக மாற்றுவோம்' என, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என்பது மக்களுக்கு தெரியும்.





டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் நல்ல வேட்பாளர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் கட்சிக்காக மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

டில்லி ஜே.என்.யூ., பல்கலை வன்முறை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம். அவர்களை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்யக்கூடாது. இளைஞர்களை சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது' எனக் கூறினார். டில்லியில் பிப்.,8ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிப்.,11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambantham sasikumar - chennai,இந்தியா
21-ஜன-202017:46:59 IST Report Abuse
sambantham sasikumar சென்னை சிங்கப்பூராக மாறும்போது , டெல்லி ஏன் லண்டனாக மாற்றமுடியாது. உங்களை போன்றவர்கள் லண்டன் நாடாளுமன்றத்தில் இருந்தால் லண்டனும் டெல்லியாக மாற்றமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜன-202016:57:27 IST Report Abuse
Endrum Indian ஆனல் கூவமாக மாற்ற முடியும் அரசியல்வியாதிகளினால் இது தான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-202013:00:32 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) நான் ஜிலேபி சாப்பிடுவதை தவிர்த்தால் டெல்லி மாசு சுத்தமாகிவிடுமா என்று கேட்ட நபர்தானே நீங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X