பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (2)
Advertisement
Kashmir,Unionministers,RaviShankarPrasad,காஷ்மீர், மத்தியஅமைச்சர்கள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மத்திய அரசின் வளர்ச்சி திட்டத்தின் பலன்களை விளக்குவதற்காக ரவிசங்கர் பிரசாத், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட 5 மத்திய அமைச்சர்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை, மத்திய அரசு, ஆகஸ்டில் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், மாநில அந்தஸ்தை இழந்தது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன்பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இதனால் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்க, காஷ்மீருக்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கடந்த 18ம் தேதி மத்திய அமைச்சர்கள் 3 பேர் ஜம்முவுக்கு சென்றனர். இந்நிலையில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்க 5 மத்திய அமைச்சர்கள், அடுத்த 4 நாட்களுக்குள் காஷ்மீர் செல்ல உள்ளனர்.





மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், முக்தார் அப்பாஸ் நக்வி, கிஷண் ரெட்டி, ரமேஷ் போக்ரியால் மற்றும் ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் காஷ்மீர் செல்ல உள்ளனர். நக்வி இன்று(ஜன.,21) ஸ்ரீநகர் செல்ல உள்ளார். 2 நாள் பயணமாக கிஷண் ரெட்டி நாளை காஷ்மீர் செல்கிறார். நாளை மறுநாள் பாரமுல்லா செல்கிறார் ரவிசங்கர் பிரசாத். 24ம் தேதி போக்ரியால் ஸ்ரீநகர் செல்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - CHENNAI,இந்தியா
21-ஜன-202016:18:16 IST Report Abuse
Siva Kumar ஒரு விஷயம் மட்டும் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் செயல்கள் அனைத்தும் நாட்டுக்காகவே அன்றி ஓட்டுக்காக அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்த உண்மை தெரிந்தும் சிலர் ஏற்றுக்கொள்ள முடியாமல் போராட்டம் மண்ணாங்கட்டி என்று அலைகிறார்கள். மக்கள் தெளிவாக உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
21-ஜன-202005:56:24 IST Report Abuse
blocked user ஒரு மாநிலத்தை சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் சென்றபின்னர் வெற்றிகரமாக இந்தியாவுடன் இணைத்துள்ளார்கள். அந்த இணைப்பு முழுமைபெற மோடி அரசு கடுமையாக உழைக்கிறது என்பதை உறுதி செய்ய இதைவிட நல்ல உதாரணம் காட்டமுடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X