பொது செய்தி

இந்தியா

ஜே.என்.யூ.,வில் நாடு தெரியாத 82 மாணவர்கள்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (42)
Advertisement
JNU,JawaharlalNehruUniversity,Delhi,டில்லி,ஜவஹர்லால்_நேரு_பல்கலை,ஜேஎன்யூ

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில், 82 பேர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள், நிர்வாகத்திடம் இல்லை என்பது, தெரியவந்துள்ளது.

ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர், சுஜீத் ஸ்வாமி என்பவர் எழுப்பிய கேள்விகளுக்கு, டில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அளித்துள்ள பதில் விவரம்: பல்கலையில் பயிலும், 301 வெளிநாட்டு மாணவர்களில், 82 பேர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள், நிர்வாகத்திடம் இல்லை. இளநிலை, முதுநிலை, எம்.பில்., - பி.எச்.டி., ஆகியவற்றின் கீழ், 41 வகை பட்டப் படிப்புகளில், அவர்கள் பதிவு செய்துள்ளனர்.





அதன்படி, 35 பேர் கொரிய மாணவர்கள்; நேபாளத்தை சேர்ந்த 25 பேர்; சீனர்கள், 24; ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள், 21; ஜப்பானை சேர்ந்தவர்கள், 16; ஜெர்மனியை சேர்ந்தவர்கள், 13; அமெரிக்காவை சேர்ந்தவர்கள், 10; சிரியா மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த தலா ஏழு மாணவர்களும், பயின்று வருகின்றனர்.

இங்கு, பயிலும் மொத்தமுள்ள, 8,805 மாணவர்களில், 4,251 மாணவர்கள், எம்.பில்., அல்லது பி.எச்.டி., படித்து வருகின்றனர். இதில், 1,264 மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பும், 2,877 மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பும் பயின்று வருகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
??????? - Thiruvaiyaru,இந்தியா
21-ஜன-202017:43:32 IST Report Abuse
??????? ஐந்து வருடம் மத்தியில் ஆட்சி செய்த பிஜேபி நிலை தவறான கொள்கை
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-ஜன-202016:46:50 IST Report Abuse
Darmavan எல்லா கல்வி கூடத்திலும் /இடத்திலும் எவ்வ்ளவு கள்ளத்தனம் .தேச துரோகிகள் உள்ளே புகுந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-202015:01:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அது பாகிஸ்தானிய கூட்டமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X