பொது செய்தி

இந்தியா

'பிரேக்கிங் நியூஸ்': ஜனாதிபதி எரிச்சல்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (59)
Advertisement
RamNathKovind,BreakingNEWS,President,President_of_India, ஜனாதிபதி, ராம்நாத்கோவிந்த், பிரேக்கிங்_நியூஸ்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ''தற்போது ஊடகங்களை, 'பிரேக்கிங் நியூஸ்' என்ற பிணி பீடித்துள்ளது. இதனால், கட்டுப்பாட்டுடனும், பொறுப்புடனும் செய்தி வழங்க வேண்டும் என்ற அடிப்படை தகர்க்கப்பட்டுள்ளது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், விருதுகளை வழங்கி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: நமது நாட்டில் பத்திரிகை தொழிலானது மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொய் செய்திகள் வெளியிட்டு, இந்தத் தொழிலுக்கான புனிதத்தை கெடுத்து வருகின்றனர். சமூக மற்றும் பொருளாதார பேதம் தொடர்பான செய்திகள் வெளியிடுவது என்பது தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகமானோர் பார்க்க வேண்டும், அதற்கான பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாற்று பாதையில் சில ஊடகங்கள் செல்கின்றன.





பிரேக்கிங் நியூஸ் எனப்படும் செய்திகளை முதலில் அளிக்கும் பிணியால் ஊடகங்கள் பீடிக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டுப்பாடு, பொறுப்பு போன்ற பத்திரிகை தர்மத்தின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஒரு தரமான செய்தியை வெளியிடும் முன், என்ன, எப்போது, ஏன், எங்கு, யாரால், எப்படி என்ற கேள்விகளை எழுப்பி பார்க்க வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்பவர், பல பாத்திரங்களை ஏற்க வேண்டும். ஆனால், தங்களுக்குரிய பொறுப்புணர்வை ஏற்காமல், தற்போது பத்திரிகையாளர்கள் புலனாய்வாளர்களாக, விசாரணை அதிகாரிகளாக, ஏன், நீதிபதியாக மாறி விடுகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
22-ஜன-202019:03:51 IST Report Abuse
karutthu நிஜமாகவே பிரேக்கிங் நியூஸ் எரிச்சலைத்தான் தருகிறது ,ஒரு வித்தியாசமான சவுண்ட் எபெக்ட் அதிகநேரம் கொடுத்து ஊடகங்கள் எரிச்சலைத்தான் தருகிறது முதலில் அதை தடை செய்யுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
22-ஜன-202013:38:01 IST Report Abuse
Lawrence Ron எல்லா உண்மையும் பத்திரிக்கை வாயிலாக வெளிவந்து விடுகிறது ... அதனால் எரிச்சல் வருகிறது
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-202003:51:53 IST Report Abuse
J.V. Iyer ஊடகங்களுக்கு இவ்வளவு சுதந்திரம் தேவை இல்லை. கட்டுப்பாடு வேண்டும். உடனே நடவடிக்கை எடுங்கள். தேசத்தின் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் உடனே இந்த ஊடகங்களுக்கு ஆப்பு வைக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X