சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் வேலைக்கு பேரம்: ஆசை காட்டும் நபர்கள்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 போலீஸ் வேலைக்கு பேரம்: ஆசை காட்டும் நபர்கள்

இந்த செய்தியை கேட்க

சென்னை : 'போலீஸ் வேலை வாங்கித் தருவதாக அரசியல்வாதிகள் ஆசை காட்டுவதால், தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டாம் நிலை காவலர்களாக ஆண்கள் 5962; பெண்கள் மற்றும் திருநங்கையர் 2465; சிறைத் துறைக்கு 22 பெண்கள் உட்பட 208 பேர்; தீயணைப்பு துறைக்கு 191 பேர் என 8826 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவர்களுக்கு எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் முடிவு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காவல் துறைக்கு 969 எஸ்.ஐ.க்களை தேர்வு செய்யவும் எழுத்து தேர்வு முடிந்துள்ளது. இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இந்நிலையில் மேற்கண்ட தேர்வர்களை குறிவைத்து அரசியல் வாதிகள் வசூல் வேட்டையில் ஈடுபடும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: அரசியல்வாதிகளின் செல்வாக்கில் போலீஸ் வேலை வாங்கித் தருகிறேன் என யாராவது ஆசை காட்டினால் நம்ப வேண்டாம். காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டுவோர் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
21-ஜன-202018:49:03 IST Report Abuse
ராஜேஷ் கவலையே படாதீங்க ஏவலுவ குடுத்தாச்சும் வேலையை வாங்கிவிடுங்கள் . அப்பாவி பொது மக்கள்தான் இருக்கிறார்களே எப்படியாச்சும் மிரட்டி சம்பாதிச்சுடலாம். அதிகாரியாவது ஒண்ணாவது
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-202009:20:03 IST Report Abuse
ருத்ரா அரசியல் வாதிகள் சிலர் நேர்மையான பாதுகாப்பு வேலைக்கு பேரம் பேசுவதால் தான் போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிஅதையே சில போலீஸ்காரர்கள் கைவிட முடியாத நிலைக்கு ஆளாகி, நேர்மையை தள்ளி விடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
21-ஜன-202008:28:22 IST Report Abuse
Krishna Too Much Police & Govt Officials- Abolish All Govt. Posts & Pay-Scales Despite Being Useless, AntiPeople, VVV Fat-Waste Expenditures Incl. Freebies & Concessions. Double Jobs With Only Minm Wages & One Per Family
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X