பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி: அமெரிக்காவின் தீவிர முயற்சி

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (13)
Advertisement
இந்தியா, ஆப்பிள், ஏற்றுமதி, அமெரிக்கா, வாஷிங்டன்ஆப்பிள், நடிகைதிஷாபதானி, india, export, wahingtonapple, apple, actressdishapathani, Dishapathani,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பிரபல இந்தி நடிகை திஷா பதானி, சமையற் கலைஞர் சஞ்சீவ் கபூர் ஆகியோர், வாஷிங்டன் ஆப்பிளுக்கான விளம்பர துாதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா, அமெரிக்க ஆப்பிளுக்காக, தனது சந்தையை, கடந்த, 2001ம் ஆண்டில் திறந்தது. அந்த சமயத்தில், மொத்தம் நான்கு கண்டெய்னர் ஆப்பிள்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் சந்தையில், 16 சதவீதத்தை, அமெரிக்க ஆப்பிள்கள் கைப்பற்றி உள்ளன.





இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத்ஐ. ஜஸ்டர் கூறியதாவது: அமெரிக்காவிலிருந்து, ஆப்பிள் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், உள்நாட்டு வினியோகம் குறைவாக இருக்கும், மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி ஆகிறது. அமெரிக்காவில் சுமார், 30 வகை ஆப்பிள்கள் உள்ளன. ஆனால், சில வகைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. விரைவில், மேலும் பல வகை ஆப்பிள்கள், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வாஷிங்டன் ஆப்பிள் கமிஷன் தலைவர் டோட் பிரைஹோவர் கூறியதாவது: செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான 2019 - 20 சந்தை பருவத்தில், 30 லட்சம் பெட்டி ஆப்பிள்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 25 லட்சம் பெட்டிகள் ஏற்றுமதி ஆகின. மெக்ஸிகோவுக்கு அடுத்து, மிகப் பெரிய இரண்டாவது சந்தை இந்தியாவாகும். இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களுக்கு, 70 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சென்னை, மும்பை, கோல்கட்டா துறைமுகங்கள் மூலமாக இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவிலிருந்து, ஆப்பிள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுமானால், அது எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜன-202019:21:35 IST Report Abuse
Babu வியாபாரத்திற்கு(கமிசன்) மட்டும் பாவாடை, பச்சை பட்டங்களெல்லாம் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-ஜன-202017:20:30 IST Report Abuse
தமிழர்நீதி 180 கோடி ஏக்கர் நிலம் . எந்த தாவரமும் வளரும் சீதோஷ்ண நிலை . அனுபவம்மிக்க விவசாயிகள் . செழித்த நிலம் . நேர் வசதி . செழித்த நிலம் . இதையெல்லாம் இணைத்து இங்கு ஆப்பிள் விளைவிக்கமுடியாமல் , கூமுட்டை அரசு , 2 . 5 ஏக்கர் ராமர் கோவில் நிலத்தில் முட்டி மோதிக்கொண்டு , இந்தியாவை சீரழித்து ,வெங்காயத்தை கிலோ 150 ரூபாவுக்கு விற்கிறது . ஆப்பிளை அமெரிக்காவிடம் வாங்குகிறது . இந்த சனி அரசு ஒழிந்தால் இந்தியா உருப்படும் . அறிவுகெட்ட கட்சியிடம் அரசு மாட்டிக்கொண்டு தவிக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜன-202016:37:18 IST Report Abuse
Endrum Indian இந்த வாஷிங்டன் ஆப்பிள் என்ற ஆப்பிள் ரூ 250 ஒரு கிலோ பச்சை ஆப்பிள் ரூ 300 ஒரு கிலோ அதே மாதிரி இன்னொரு ஆப்பிள் இங்கு கிடைக்கின்றது அது ரூ 100 ஒரு கிலோ அதைத்தான் நான் வாங்குகின்றேன். இதிலிருந்தே தெரிகின்றது இந்த ஆப்பிளை எப்படியாவது நம் தலையில் கட்டத்தான் இந்த விளம்பர நடவடிக்கை. இதே ஆப்பிள் நான் பெல்ஜியத்தில் வாங்கினேன் 2.50 யூரோ ஒரு கிலோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X