அதிகாரி மகனுக்கு கல்யாணம்... அலறிய தொழிலதிபர்கள்!

Added : ஜன 21, 2020
Advertisement
பொங்கல் கொண்டாட்டம் முடிந்த நிலையில், மித்ராவை, அவரது காலே ஜூக்கு 'டிராப்' செய்ய சென்று கொண்டிருந்தாள் சித்ரா.அவ்வழியே சென்ற வருவாய்த்துறையின் வாகனத்தை பார்த்த மித்ரா, ''அக்கா.. ரெவின்யூ ஆபீசர்னா, எப்படி வேண்டுமானாலும், பட்டா கொடுக்கலாமானு கேள்வி வந்துள்ளது,'' என்றாள்.''ஏன், மித்து! ரெவின்யூதானே பட்டா கொடுக்க முடியும்,''''அக்கா... விஷயத்தை முழுசா கேளுங்க.
அதிகாரி மகனுக்கு கல்யாணம்... அலறிய தொழிலதிபர்கள்!

பொங்கல் கொண்டாட்டம் முடிந்த நிலையில், மித்ராவை, அவரது காலே ஜூக்கு 'டிராப்' செய்ய சென்று கொண்டிருந்தாள் சித்ரா.

அவ்வழியே சென்ற வருவாய்த்துறையின் வாகனத்தை பார்த்த மித்ரா, ''அக்கா.. ரெவின்யூ ஆபீசர்னா, எப்படி வேண்டுமானாலும், பட்டா கொடுக்கலாமானு கேள்வி வந்துள்ளது,'' என்றாள்.

''ஏன், மித்து! ரெவின்யூதானே பட்டா கொடுக்க முடியும்,''

''அக்கா... விஷயத்தை முழுசா கேளுங்க. இதுக்கு முன்னாடி இருந்த மாவட்ட அதிகாரி, தன்னோட சொந்தக்காரங்களுக்கு, 'நார்த்' சைடில் உள்ள இடத்தில், 10 சென்ட் நிலத்துக்கு மொத்தமா பட்டா கொடுத்திட்டாராம்,''

''அதுசரி... இதெப்படி தெரிஞ்சுது?''

''அந்த ஏரியாவில் வசிக்கிற சிலருக்கு விவரம் தெரிஞ்சு, ஆர்.டி.ஐ.,ல் கேட்டு, பதில் வாங்கியிருக்காங்க. மழைநீர் கால்வாய்க்காக இருந்த இடத் துக்குத்தான் பட்டாவாம்,''

''இந்த விவகாரத்தை கெளப்ப, சும்மா... மனு கொடுத்தா வேலையாகுதுன்னு, கோர்ட்டில் கேஸ் போட, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு முடிவு செஞ்சிருக்காங்களாம்,''

''இந்த மாதிரி தண்ணீர் தேங்கற இடத்தை பட்டா போட்டு கொடுக்கும் ஆபீசர்களை, அந்த 'பழனிசாமி'தான் காப்பாத்தணும்,'' என்ற சித்ரா, ''ஏன்டி, மித்து, 'பல்லடத்தில், 'மாஜி' மருமகன்கிட்ட எதுவும் வச்சுக்காதீங்கன்னு உத்தரவாம்,'' சந்தேகமாக கேட்டாள்.

''ஆமாங்க்கா... அவரு, பல்லடம் யூனியன் வார்டில் தோத்துட்டாரு. அதனால, மறுபடியும் அங்கயே தன்னோட பலத்த நிரூபிக்க, கட்சிக்கு மெம்பர் சேர்க்கற வேலைய ஆரம்பிச்சிட்டாரு. இது, 'மாஜி'க்கு பிடிக்கலை. அதனால, அங்க இருக்கற நிர்வாகி ஒருத்தர் வீட்டுல, ரகசிய கூட்டம் போட்டு, மருமகனுக்கு ஆதரவா யாரும் போகக்கூடாதுன்னு, சொல்லிட்டாராம்,''

''சரியா போச்சு. ஏற்கனவே, 'சவுத்' ஒரு பக்கம் கோஷ்டி கானம் பாடிட்டு இருக்காரு. இப்ப, இதுபோன்ற ஆட்களை 'மாஜி' எப்படி சமாளிப்பாரோ?''

''அக்கா... அதை விட இன்ட்ரஸ்டிங் மேட்டர் சொல்றேன், கேளுங்க''

''சரி... சொல்லு பார்க்கலாம்''

''ஓட்டு வாங்கறதுக்குத்தானே செலவு பண்ணுவாங்க... ஆனா, இங்க, ஓட்டு பிரிக்கிறதுக்கு, 20 லகரம் செலவு பண்ணாங்களாம்,''

''என்னடி சொல்ற. புரியற மாதிரி சொல்லு''

''ஆமாக்கா... எதிரணி ஓட்டு பிரிஞ்சா மட்டும்தான், கரைப்புதுார் ஊராட்சி ஆளும்கட்சி வசம் இருக்கும்னு திட்டம் போட்டு, எதிரணியிலிருந்து ஒருத்தரை நிக்க வச்சு, 20 லகரமும் கொடுத்திட்டாங்க. அவரும், அப்படியிப்படின்னு, ஓட்டு பிரிச்சதில், எம்.எல்.ஏ.,வோட ஆதரவாளர் ஜெயிச்சுட்டாரு,''

''ஆனா, போதிய பலமில்லாததால், துணை தலைவர் பதவியை, எதிர்க்கட்சி பிடிச்சிருச்சு. தன்னோட சொந்த ஊராட்சி கைவிட்டு போயிடக்கூடா துன்னு, எம்.எல்.ஏ., இந்த வேலையை செஞ்சு, தக்க வச்சிட்டாராம்க்கா,''

''அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் மித்து,'' என கவுண்டமணி பாணியில் சொன்ன சித்ரா, ''போன வாரம் கோவையில் பல இடங்களில், குட்கா பொருள் சிக்கியது தெரியுமா?'' என்றாள்.

''தெரியலீங்க்கா...''

''அந்த மேட்டரில், நடந்த என்கொயர்ல, திருப்பூரில் இருந்துதான், கோவை, நீலகிரிக்கு 'குட்கா சப்ளை' செய்றதை கண்டுபிடிச்சிருக்காங்க. இதற்காக, பெரிய 'நெட்ஒர்க்' இயங்குதாம். அதையும் கண்டுபிடிக்கற முயற்சியில, 'ஸ்பெஷல் டீம்' தீவிரமா இறங்கியிருக்குதாம்,''

''அது கரெக்ட்தானுங்க்கா... அப்பதான், இதை ஓரளவுக்காவது ஒழிக்க முடியும். இப்ப பாருங்க, ரூரல் ஏரியாவில் அடிக்கடி எரிசாராயம் சிக்கிட்டே இருக்குது''

''ஆமான்டி மித்து, நானே சொல்லலாம்னு இருந்தேன். அவிநாசிகிட்ட, சின்னக்கானுார் கிராமத்தில், ஒரு பண்ணை வீட்டில், 16 ஆயிரம் லிட்டர் எரிசாரயத்தை, சேலம் மதுவிலக்கு மத்திய புலனாய்வு போலீசார் புடிச்சிட்டாங்க,''

''இதே மாதிரிதான், நாலு மாசத்துக்கு முன்னாடி, பல்லடத்துக்கு பக்கத்தில ஒரு கிராமத்தில புடிச்சாங்க. இப்ப அவிநாசியில, பல மாதங்களாக சத்தமில்லாமல், எரிசாராயம் கடத்தி வந்தது, லோக்கல் போலீசுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு, சேலத்திலிருந்து வந்த அதிகாரி ஒருத்தர் கேள்வி மேல் கேள்வி கேட்டாராம்,''

''அப்புறம் வழக்கம்போல, ஏதோதோ சொல்லி சமாளிச்சிருக்காங்க,'' என்று சித்ரா சொன்னதும், 'மாவட்ட ஆயுத காவல் படை'யின் வாகனம் சென்றது.

அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா... ஏ.ஆர்., போலீசில் பெண் ஒருத்தர், 'சூசைட் அட்டெம்ப்ட்' பண்ணாங்களாம்,''

''ஏன்.. என்னாச்சு?''

''ஏ.ஆர். போலீசாருக்கு அவ்வளவு சீக்ரமா லீவே கொடுக்கறதில்லையாம். வேற வழியில்லைன்னு கேட்டா, அங்க போய்க்கேளு, இங்க போய்க்கேளுன்னு, அலைக்கழிக்கிறாங்களாம். இப்ப கூட, பொங்கலுக்கு லீவு கேட்டு கிடைக்காம பலர் மன உளைச்சலில் இருந்திருக்காங்க. அவங்களில், ஒரு லேடி 'பாய்ஸன்' குடிச்சு, 'சூைஸட்' பண்ண பார்த்தாங்களாம்,''

''இதை பார்த்து பயந்த அதிகாரி, பிரச்னையை அமுக்கிட்டு, எஸ்.பி., காதுக்கு போகாம கனகச்சிதமாக பார்த்துட்டாராம்,''

''இப்படி மன உளைச்சலுக்கு, ஆளாகும் போலீசில் ஒரு சிலர்தான், பப்ளிகிட்ட எரிஞ்சு விழறாங்க,''என்ற மித்ரா, ரோட்டில், குறுக்காக சென்ற சேவலை பார்த்து, ''அக்கா... பார்த்து ஓட்டுங்க. இல்லாட்டி, சிக்கன் 65 ஆயிடும்,'' என்றாள்.''ஏன்டி, நான் கண்டுக்கறேன். ஆனா, உடுமலை போலீஸ்தான் கண்டுக்கறதில்லை,''

''என்னக்கா, புதிர் போடறீங்க!''

''பொங்கலுக்கு, போலீசா ரின் ஆசியோடு, அங்க பேமஸாக இருக்கிற 'ஆற்றின்' பேர் கொண்ட ஸ்டேஷன் லிமிட்டில், சேவல் கட்டு நடந்துதாம். அதிலயும், ஒருத்தர், 200 சேவலை வச்சு, பெரியளவில், போட்டி வச்சு, பல லகரம் சம்பாதிச்சுட்டாராம்,''

''இவ்ளோ பப்ளிக்கா நடந்தது, போலீசுக்கு தெரியாதா?''

''தெரியாம இருக்குமா? நல்ல 'கவனிப்பு'தான் காரணம். இதேபோல, பணம் புழங்குகிற ஆபீசில அதிகாரி ஒருத்தர், பல லகரங்களை 'மொய்' வாங்கி துாள் கிளப்பிட்டாராம்,''

''இது என்ன விஷயங்க்கா?''

''அட... திருப்பூரில் உள்ள அந்த 'ரஹோ' அதிகாரியோட மகன் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அவருக்கு கீழே உள்ள அதிகாரி தலைமையில், ஒரு 'டீம்', திருப்பூரில் தொழில் துறையினரிடம், பல லட்சக்கணக்கான மதிப்புள்ள 'காஸ்ட்லி' பொருட்களை, 'அய்யா, மகனுக்கு மொய்' வைக்கோணும்னு சொல்லியே வாங்கி, சீனியர் கிட்ட கொடுத்திட்டாராம். இதனால், தொழில் அதிபர்கள் அலறிட்டாங்க,''

''அடேங்கப்பா... பெரிய ஆளுங்கதான்க்கா''

''இன்னும் கேளு. இப்படி மொத்தமா, கிட்டத்திட்ட, 50 லகரத்துக்கு, தங்கக்காசு, வெள்ளி பொருட்களை வசூல் பண்ணிட்டாராம். கவர்மென்ட் ஆபீஸர், இப்படி லஞ்சம் வாங்கவே கூடாதுன்னு,ரூல்ஸ் இருந்தும் கூட,'நம்மை யார் என்ன செய்ய முடியும்னு' தெனாவெட்டா, வசூல் வேட்டையாடிட்டாங்க,''

''இதை தெரிஞ்சுகிட்ட சிலர், இதனை சென்னை வரைக்கும் கொண்டு போய்ட்டாங்க. அடுத்து, விஜிலென்ஸ் அதிகாரிக்கும் பெட்டிஷன் போடறங்களாம், பார்க்கலாம் என்ன செய்றாங்கன்னு?'' என்ற சித்ரா, காலேஜ் வாசலில் மித்ராவை இறக்கி விட்டாள்.

அவள், விடைபெறவும், சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X