கலெக் ஷனுக்கு ரெண்டு பேரு... அதிகாரிக்கு துணிச்சல் பாரு!

Added : ஜன 21, 2020
Share
Advertisement
அ ன்றைய தினம், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, இ-மெயில் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. மார்க்கெட்டுக்கு சென்றிருந்த மித்ரா, காய்கறிகளுடன் வீட்டுக்குள் நுழைந்ததும், ''என்னக்கா, கம்ப்யூட்டர் முன்னாடி தவமிருக்க ஆரம்பிச்சிட்டீங்க, ஏதாவது விசேஷமா,'' என கேட்டாள். ''கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டுக்கு, போலி வரைபடம் தயாரிச்சு, கட்டட வரைபட
கலெக் ஷனுக்கு ரெண்டு பேரு... அதிகாரிக்கு துணிச்சல் பாரு!
அ ன்றைய தினம், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, இ-மெயில் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.


மார்க்கெட்டுக்கு சென்றிருந்த மித்ரா, காய்கறிகளுடன் வீட்டுக்குள் நுழைந்ததும், ''என்னக்கா, கம்ப்யூட்டர் முன்னாடி தவமிருக்க ஆரம்பிச்சிட்டீங்க, ஏதாவது விசேஷமா,'' என கேட்டாள்.''கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டுக்கு, போலி வரைபடம் தயாரிச்சு, கட்டட வரைபட அனுமதிவாங்குனதுனால, வரைவாளரின் உரிமத்தை, கார்ப்பரேஷன் கமிஷனர் 'கேன்சல்' பண்ணுனாரு. அவருக்கு பல தரப்புல இருந்தும், நெருக்கடி வந்துருக்கு; அவரு அசைஞ்சு கொடுக்கலை. இப்ப, ஐகோர்ட் படியேறி, உரிமத்தை ரத்து செஞ்சது தப்புன்னு மனு தாக்கல் செஞ்சிருக்காங்க,''''அடடே... அப்படியா,''
''மனுவை விசாரிச்ச


ஐகோர்ட், வர்ற, 31ம் தேதிக்குள்ள கார்ப்பரேஷன்ல இருக்கற ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கு. அந்த நகலை, நண்பர் ஒருத்தரு மெயில் அனுப்பியிருக்காரு. அதை படிச்சுக்கிட்டு இருந்தேன். அவ்ளோதான் விஷயம்,'' என்றாள் சித்ரா.

''கார்ப்பரேஷன் அதிகாரி ஒருத்தரு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு எதிரா வழக்கு தொடர்ந்தவங்களை சந்திச்சு, கை குலுக்கிட்டு வந்தாராமே,''

''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். 'நீங்க பதிவு செஞ்ச வழக்கால, கார்ப்பரேஷன் வட்டாரமே கதிகலங்கி இருக்கு'ன்னு சர்ட்டிபிகேட் கொடுத்திட்டு வந்திருக்காரு. கார்ப்பரேஷன் சம்பந்தமான ஆவணங்களை, அந்த அதிகாரிதான், வழக்கு போட்டவங்களுக்கு நகல் எடுத்துக் கொடுத்திருப்பாருன்னு பேசிக்கிறாங்க. இன்னொரு கொசுறு தகவல், அவரு, தி.மு.க., அனுதாபியாம்,''

''அதிகாரி ஒருத்தருக்கு, நாலு லட்சம் ரூபாய் ஐகோர்ட் அபராதம் விதிச்சிருக்காமே. அதையும் சொந்த பணத்தை கட்டணும்னு, உத்தரவு போட்டிருக்காமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமா, நானும் விசாரிச்சேன். 20 வருஷத்துக்கு முன்னாடி, ஒன்றுபட்ட கோயமுத்தூர் மாவட்டமா இருந்தப்ப, பல்லடம் பக்கத்துல நடந்த சம்பவமாம். அங்கன்வாடியில இருந்த ரெண்டு குழந்தைங்க, குழிக்குள்ள விழுந்து இறந்துட்டாங்க. அதுசம்பந்தமான கேசுல, இப்ப தீர்ப்பு வந்துருக்கு. கல்வித்துறை அதிகாரி, ரூ.4 லட்சம் அபராதம் செலுத்தணும்; சொந்த பணத்தை கட்டணும்னு ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கு,''''அச்சச்சோ... அப்புறம்,''

''இதுசம்பந்தமான வழக்கு விசாரணையில இருந்தப்ப, கலெக்டருக்கும் நெருக்கடி வந்திருக்கு. கோர்ட்டுல ஆஜரான அரசு வக்கீல், பல்லடம் வட்டாரம் திருப்பூர் மாவட்டத்துல இருக்குன்னு சொல்லி, நைசா விலகிட்டாங்க. எஜூகேசன் டிபார்ட்மென்ட்காரங்க அசால்ட்டா இருந்துட்டாங்க''

''இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு, இப்ப இருக்குற அதிகாரி எப்படி பொறுப்பாவாருன்னு கேள்வி எழுந்துருக்கு. இந்த பிரச்னையில இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு கேக்குறதுக்காக, அந்த அதிகாரி சென்னைக்கு போயிருக்காராம்.

'கல்லா' கட்டுற அள


வுக்கு அதிகாரம் படைச்ச அதிகாரியா இருந்தாலும், சல்லிக்காசு வாங்க மாட்டாராம். அந்த அதிகாரிக்கு வந்த சோதனைன்னு, எஜூகேசன் டிபார்ட்மென்ட்டுல புலம்பல் சத்தம் கேக்குது,''

''ஆனா, எஜூகேசன் டிபார்ட்மென்ட்டுல, ஒவ்வொரு பிரைவேட் ஸ்கூல்லயும், தலா, அஞ்சாயிரம் ரூபா வசூலிச்சதா கேள்விப்பட்டேனே,''

''அதுவும் உண்மைதான்! அடுத்த வாரம், நம்மூர்ல, 'சயின்ஸ் எக்ஸிபிஷன்' நடக்கறதா இருந்துச்சு; ஒவ்வொரு ஸ்கூலிலும் தலா அஞ்சாயிரம் ரூபா வசூல் பண்ணியிருக்காங்க. கடைசி நேரத்துல விழாவை சென்னைக்கு மாத்திட்டாங்க. வசூல் தொகையை திருப்பிக் கொடுத்திட்டு இருக்காங்க. இன்னும் ஒரே ஒரு 'பிளாக்'குல மட்டும், கொடுக்காம இருக்காங்களாம்,''

''ஆமா, பொங்கல் அன்னைக்கு, கோவை குற்றாலத்துக்கு போயிருந்தீங்களே, கூட்டம் அதிகமா இருந்திருக்குமே,''

''ஆமாப்பா, எக்குத்தப்பான கூட்டம். ஏண்டா போனோம்னு ஆகிடுச்சு. குளிக்கற இடத்துக்கு மொபைல் போன் கொண்டு போறதுக்கு, தடை விதிச்சா நல்லா இருக்கும். செல்பி எடுக்கறதுக்கு ஒரு கூட்டம் அலையுது. மலை உச்சியில நின்னுக்கிட்டு, பொண்ணுக குளிக்கிறத படமெடுக்கிற கோஷ்டியும் சுத்திக்கிட்டு இருக்கு,'' என்றபடி, வெளிநாட்டுக்கு சுற்றுலா 'டிரிப்' போனதை குறித்து, போனில் நோண்ட ஆரம்பித்தாள் சித்ரா.
அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, வெளிநாடு போகப் போறீங்களா?,'' என கிளறினாள்.

''வெளிநாடு போறதா சொல்லி, அனுமதி வாங்கிட்டு, 'மணி பிரதர்ஸ்' குற்றாலத்துக்கு போயிருந்தாங்களாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்துக்கு, ஒரு நாள் கூட போகலையாம். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளைக்கு மட்டும் சிலைக்கு மாலை அணிவிச்சிட்டு போனாராம்,''

''ஏம்ப்பா, அவருதானே ஆளுங்கட்சி மாநகர் மாவட்ட செயலாளரா இருக்காரு; முக்கியமான பதவியாச்சே. அவரே விரக்தியில இருக்காரா,'' என கேட்டாள் சித்ரா.

''வடக்கு தொகுதியில எந்த வளர்ச்சி பணியும் நடக்குறதில்லையாம். அவரு சொல்ற வேலையை எந்த அதிகாரியும் கேக்குறதில்லையாம்; செய்றதும் இல்லையாம். மூணு வருஷம் ஓடிப்போயிருச்சு. குறிப்பிட்டுச் சொல்லும்படியா, எந்த வேலையுமே தொகுதிக்குள்ள நடக்கலையாம்.


மக்களுக்கு எதுவுமே செய்யாம, சட்டசபைக்கு மட்டும் போயி, என்னத்தை சாதிக்கப் போறோம்னு ஆதரவாளர்களிடம் புலம்புனாராம்,'' என்றபடி, சூடா இஞ்சி டீ கொடுத்தாள் மித்ரா.

அதை வாங்கி உறிஞ்சிய சித்ரா, அன்றைய நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய புகைப்படம் பிரசுரமாகி இருந்தது.

அதை பார்த்ததும், ''மித்து, அரசு விழாக்கள்ல ஜாலியா இருக்கிற மினிஸ்டர், அரசு ஆஸ்பத்திரியில நடந்த சொட்டு மருந்து முகாமுல சூடாகிட்டாராமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, முகாம் முடிஞ்சதும் வார்டுக்குள்ள நுழைஞ்சிட்டாரு; அதை அதிகாரிங்க எதிர்பார்க்கலை. படுக்கையில இருந்தவங்களிடம் குறை கேட்டிருக்காரு. கழிப்பறை நாத்தம் தாங்காம கடுப்பாயிட்டாரு. ஆஸ்பத்திரி முழுக்க இருக்கற, 'டாய்லெட்'டுகளை, ரெண்டு நாளைக்குள்ள, 'கிளீன்' செய்யணும்னு உத்தரவு போட்டிருக்காரு,''
''அடடே... நல்ல விஷயமாச்சே... இனியாவது விமோசனம் கெடைக்கும்னு சொல்லுங்க. இதே மாதிரி ஒவ்வொரு மாசமும் போனாருன்னா, ஏழை நோயாளிகளுக்கு நல்ல 'டிரீட்மென்ட்' கிடைக்கும்,''
''அதெல்லாம் சரி, மூணு பசங்களை போலீஸ்காரங்க நைய புடைச்சிட்டாங்களாமே, உண்மையா,''

''அதுவா, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போறதுக்கு, சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டுல ஏகப்பட்ட பயணிகள் காத்திருந்தாங்க. நாகர்கோவில், தேனி போறதுக்கு குறைவா பஸ் இயக்குனாங்க.

பயணிங்க, குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது காத்திருந்து போயிருக்காங்க. நொந்துபோன பயணிகள்ல சில பேரு, மற்ற பயணிகளை திரட்டி, பஸ் ஸ்டாண்ட் எதிரே, நள்ளிரவு, 1:30 மணிக்கு திடீர்னு ரோட்டுல ஒக்கார்ந்துட்டாங்க.

போலீஸ்காரங்க சமாதானம் செஞ்சதும் கலைந்து போனாங்களாம். மறியலுக்கு ஆள் சேர்த்த மூணு பசங்களை கூப்பிட்டுபோய், போலீஸ்காரங்க வெளு வெளுனு வெளுத்துட்டாங்களாம்,''

''அச்சச்சோ, பாவமில்லையா? பயணிகள் கூட்டத்தை பார்த்து, சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்காம, பசங்களை அடிக்கிறது நல்லாவா இருக்கு,''''போலீசை பத்தி சொன்னதும், எனக்கொரு மேட்டரு ஞாபகத்துக்கு வருது. போன வாரம், ராமருடன் 'மூன்' சேர்ந்த அதிகாரியை பத்தி பேசுனோமே. அவருக்கு எதிரா, போலீசுலயே ஒரு 'குரூப்' வேலை செஞ்சிட்டு இருக்காம்.

அவுங்கதான், அவருடைய பெயரை, 'டேமேஜ்' செய்யுற மாதிரி கெளப்பி விடுறாங்களாம்,'' என்ற மித்ரா, ''கலெக்டரை பத்தி, தகவல் சொல்றதா சொல்லியிருந்தீங்களே,'' என, கொக்கி போட்டாள்,
''அடடே... கரெக்டா ஞாபகம் வச்சிருக்கியே,'' என்ற சித்ரா, ''அரசு ஊழியர் சங்கத்துக்காரங்க, வழக்கமா, உணவு இடைவேளை சமயத்திலும், வேலை முடிஞ்சதும் சாயாங்காலத்துல கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்குள்ளேயே, சங்க கொடியேற்றி, ஆர்ப்பாட்டம் செய்வாங்க.

''இதுக்கு முன்னாடி இருந்த ஒரு கலெக்டரு, ஆர்ப்பாட்டம் செய்றதுக்கு தடை விதிச்சாரு; இன்னொரு கலெக்டரு, எல்லா கொடிக்கம்பத்தையும் கழட்டுனாரு. இப்ப இருக்கற கலெக்டரு, தாமஸ் கிளப்புக்கு 'செக்' வச்சிட்டாரு.

''இனி, அரசாங்கத்துக்கு எதிரா, 'கொடி' பிடிக்க ஒன்ணு சேர முடியாதுன்னு சொல்லுங்க,'' என்ற மித்ரா, ''ஒருத்தருக்கு கூட விடுபடக்கூடாதுன்னு வீடு வீடா போயி பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கச் சொல்லிருக்காங்க. ஒரு கடைக்கு மூணு ஆளுங்கட்சிக்காரங்களை நியமிச்சிருக்காங்களாம். அவுங்க, ரூ.200, ரூ.300ன்னு அமுக்கிடுறாங்களாம். வீட்டுக்கே வந்து பொங்கல் பரிசு கொடுக்கறதுனால, கார்டுக்காரங்களும் பெருசுபடுத்தலையாம்,'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள்.

''இருந்தாலும், ஏகப்பட்ட கடையில இலவச வேட்டி, சேலை கொடுக்கலைன்னு கேள்விப்பட்டேனே,''

''ஆமாக்கா, குரும்பபாளையம் போற வழியில இருக்கற கடையில கொடுக்காம, வெளிமார்க்கெட்டுல, ஒரு


செட் ரூ.300க்கு வித்துட்டாங்களாம்.

இதுசம்பந்தமா விசாரிச்சா, மாசம் தவறாம மேலதிகாரிக்கு 'கப்பம்' கட்டணும்னு சொல்றாங்க. பணத்துக்கு நாங்க எங்க போறதுன்னு, கடைக்காரங்க சொன்னாங்களாம்,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா.

அப்போது, அமைச்சரவை கூட்டம் நடந்து கொண்டிருப்பதாக, செய்தி ஒளிபரப்பானது. அதை பார்த்த சித்ரா, ''என்னப்பா, கார்ப்பரேஷனுக்கும் எலக் ஷன் நடத்திருவாங்க போலிருக்கு... ஆமா, ரெஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட் ஆபீசர் ஒருத்தரு, உறவுக்கார பயலுக ரெண்டு பேர 'ஜாயின்ட்'டாக்கி, செம கலெக் ஷன் பண்றாராம்... பிரைவேட் அபார்ட்மென்ட்ல ரூம் போட்டு, கலெக் ஷன் பணத்த மெஷின்ல எண்ணிட்டு இருக்காராம்.

''இவரப்பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 'சக்தி' இல்லாம போயிடுச்சான்னு, ஆபீசுக்குள்ள பலரும் பேசிக்கிறாங்களாம்,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X