பொது செய்தி

தமிழ்நாடு

'திரைகடல் ஓடியும் கூலிப்படை நடத்து': பரிதவிக்கும் தமிழக தொழிலாளர்கள்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (25)
Advertisement

சிவகங்கை : தமிழகத்தில் இருந்து கொண்டே ஏஜன்ட்கள் சிலர் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் தொழிலாளிகளிடம் கூலிப்படை மூலம் பணம் பறிக்கின்றனர்.

கூலிப்படையிடம் சிக்கிய சிவகங்கை மாவட்டம் பெரிய உஞ்சனையை சேர்ந்த விஸ்வநாதன் (35), 2016 ல் மலேசியா சென்று கூலிப்படையினரால் கடத்தப்பட்டு சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் மீட்கப்பட்டார்.


நேற்று(ஜன.,20) கலெக்டரை சந்தித்த அவர் கூறியதாவது: மதுரை ஏஜன்ட் ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் கொடுத்து மலேசியா சென்றேன். ஏற்கனவே 10 ஆண்டு பணி அனுபவம் இருந்ததால் நல்ல சம்பளம் கிடைத்தது. பாஸ்போர்ட்டை ஏஜன்ட் வாங்கி வைத்துக்கொண்டு, கூலிப்படை மூலம் மிரட்டி மாதந்தோறும் பணம் வசூலிக்க தொடங்கினார். மூன்று ஆண்டுகளில் ரூ.11 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்தேன். பணம் தர மறுத்த போது கூலிப்படை மூலம் கடத்தி உணவு, தண்ணீர் கொடுக்காமல் 6 நாட்கள் அடைத்து வைத்தனர்.

எனது தாய் சிவபாக்கியத்துக்கு போன் செய்து, 'ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் உயிரோடு விடுவோம்' என மிரட்டினர்.எனது தாய் சிவகங்கை கலெக்டரிடம் கடந்த நவம்பரில் புகார் கொடுத்தார். இந்திய துாதரகத்துக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியதால் என்னை விடுவித்தனர். மீண்டும் வேலைக்கு சேர்ந்த என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் துாதரகத்தில் தஞ்சம் அடைந்து சொந்த ஊர் வந்தேன், என்றார்.

இது போன்ற புகார் வரும் போது தமிழக போலீசாரை ஏஜன்ட்கள் சரிகட்டி விடுவதாகவும், அதனால் 'இது வெளிநாட்டில் நடந்தது' என போலீசார் தட்டிக்கழித்து விடுவதாகவும் தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
21-ஜன-202020:46:41 IST Report Abuse
spr அன்று முதல் இன்று வரை ராமநாதபுரம், நெல்லை கன்யாகுமரி மாவட்டங்கள் கள்ளர்கள் ராஜ்யமாகவே நினைக்கப்பட்டது. வேறு வேலை எதுவும் செய்யாமல், திருடுவதனை ஒரு பெருமை மிக்க செயலாக, கன்னம் வைப்பதனை ஒரு சாதனையாக எண்ணுபவர்கள் காவக்கூலி கொடுக்காவிடில் கள்ளனுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் காவற்காரர்களே கள்ளராக மாறியதனை சொல்லிச் சொல்லியே ஒருவர் சாகித்ய அகாடமி விருது கூட வாங்கிவிட்டார் தமிழன் பெருமையைச் சொல்ல வந்தவர்கள் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" என்பதனைச் சொல்லி அதற்கு வீரம் மட்டுமே தமிழர் பெருமை என்றெல்லாம் விளக்கம் கூறினார்கள். ஆனால் உண்மையில், இரும்புக் காலம் (Iron age) என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகள் (பொதுவாகப் போர்க்கருவிகள்/ஆயுதங்கள்) உழவுக்கருவிகள் உருவாக்குவது மற்றும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். இரும்புக்காலத்தின் போது தரமிக்கக் கருவிகளையும் ஆயுதங்களையும் உருவாக்க எஃகே பயன்படுத்தப்பட்டது. இந்த நுணுக்கம் மேம்பட்ட ஒன்று இவை இரும்பும் கரிமமும் சேர்ந்த கலவையாக தயாரிக்கப்பட்டன தமிழ்நாட்டில் ஏனைய நாடுகளைப்போல் புதிய கற்காலத்திற்குப் பிறகு, செம்புக்காலம் அல்லது வெண்கலக் காலம் உருவாகவில்லை. மாறாக, இரும்புக் காலமே தோன்றியதென்பது புவியியலாளர்களின் கருத்தாக உள்ளது.கி.மு.500 தொடங்கி கி.பி.300 வரைக்குமான சற்றேறக்குறைய 800 ஆண்டு காலத்திய தமிழகத்தின் வரலாற்றினை இரும்புக்காலம் என்று தொல்லியலாரும், சங்க காலம் என்று இலக்கிய திறனாய்வாளர்களும் கணக்கிட்டுள்ளனர் ஆனால், நம் தமிழறிஞர்கள் எவரும் தப்பித் தவறிக்கூட இந்த சொற்றோடருக்கு பிற பகுதியினர் அறிந்திராத வகையில், அவர்களுக்கு முன்னரே கூர் மழுங்காத, வலுவான எளிதில் உடையாத போர் வாளை செய்ய ஏற்ற உயர்ந்த தொழில் நுணுக்கம் கற்றவர்கள் தமிழர்கள் என்று விளக்கம் சொல்லத் தெரியாதவர்கள் நம் பெருமையினை நாமே அறியவில்லை நமக்கு காதல் மற்றும் வீரம் மட்டுமே உயர்ந்தது என்ற நினைப்பு அன்று முதல் இன்று வரை நினைப்பு அதனையே நம் திரையுலகமம் நம்புகிறது எனவே கடல் கடந்து கூலிப்படை நடத்துவதனைப் பெருமையாகவே கூட நம்மவர்கள் நினைக்க வாய்ப்புண்டு
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-ஜன-202018:42:01 IST Report Abuse
Sampath Kumar இதை எல்லாம் செய்ப்பவர்கள் யார் ? உண்மை என்ன ? இங்கு இருந்து செல்பவர்கள் அங்கு உள்ள தமிழர் கலை நம்முகிறார்கள் அனால் அவர்களோ காசு தான் முக்கியம் என்று நம் இன மக்கள் என்றும் பாராமல் இதுமாதிரி செய்கிறரர்கள் இது தமிழனுக்கு தமிழன் சேயும் துரோகம்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
21-ஜன-202015:58:03 IST Report Abuse
dandy சுடலை கான் வாள் ஏந்தி மலேசிய போய் ....இந்த மோசடிகளை களையலாம்..கூடவே உதவானிதி மெரினாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம் கட்டுமரம் போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X