ஆந்திராவிற்கு 3 தலைநகர்: எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (7+ 12)
Advertisement

ஐதராபாத்: ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நேற்று(ஜன.,20) இரவு சட்டசபையில், நிறைவேறியது. இந்த மசோதாவில், எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆந்திராவில் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், சட்டசபை தலைநகராக அமராவதி மற்றும் நீதித் துறை தலைநகராக கர்னுால் அமைய உள்ளது. இதற்கான மசோதா, ஆந்திர சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலத்தின் பல இடங்களில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான 3 நாட்கள் நடக்கும் சிறப்பு சட்டசபை தொடர் நேற்று துவங்கியது


ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது,ஆந்திராவின் தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. அமராவதியை சர்வதேச தரத்தில் அமைப்பதற்கு அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் கடந்த மே மாதம் ஆந்திராவில் ஜெகன்மொகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.




அவை துவங்கியதும், தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் '' ஜெய் அமராவதி '' என கோஷம் போட்டனர். அவர்களை அமைதியாக அமரும்படி சபாநாயகர் எச்சரித்தார். அதனை கண்டு கொள்ளாததால், 17 பேரையும் சஸ்பெண்ட் செய்த சபாநாயகர், அவர்களை வெளியேறும்படி கூறினார். இதற்கும் அவர்கள் மறுக்கவே, அவைக்காவலர்கள் குண்டுகட்டாக அவர்களை அழைத்து சென்றனர்.






இதன் பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் பேசுகையில், '' நாங்கள் தலைநகரை மாற்றவில்லை. கூடுதலாக இரண்டு தலைநகரங்களை சேர்க்கிறோம். அமராவதி தலைநகராக நீடிக்கும். இந்த பிராந்தியத்திற்கு நாங்கள் எந்த துரோகத்தையும் செய்யவில்லை. அமராவதி குறித்த சந்திரபாபுவின் திட்டங்கள், தலைநகர் போல் இல்லாமல் ரியல் எஸ்டேட் திட்டம் போன்று இருந்தது என்றார். இதன் பின்னர் விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சியான தெலுங்குதேசம், மசோதாவில் கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன.

மசோதா நிறைவேறிய பின்னர், அரசின் முடிவை எதிர்த்து, பேரணி செல்ல முயன்ற, முன்னாள் முதல்வர் சந்திரபாபு மற்றும் தெலுங்குதேசம் கட்சி முக்கிய எம்.எல்.ஏ.,க்கள், தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.





பின்னர் சந்திரபாபு கூறுகையில், உலகில் எந்த மாநிலத்திற்கும் 3 தலைநகரங்கள் இருக்காது. வரலாற்றில் இன்று கருப்பு நாள். ஆந்திராவையும், அமராவதியையும் காக்க நாங்கள் விரும்புகிறோம். நான் மட்டும் அல்ல, மக்களும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். அனைவரையும் அரசு கைது செய்கிறது. ஜனநாயகத்தில் இது மோசமான நடவடிக்கை என்றார்.

ஆந்திர சட்டசபையின் கீழவையில், இந்த மசோதா நிறைவேறினாலும், மேலவையில் ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரசுக்கு சிக்கல் நீடிக்கிறது. மொத்தம் 58 உறுப்பினர்கள் கொண்ட அந்த அவையில், ஆளும்கட்சிக்கு 9 உறுப்பினர்களே உள்ளனர். தெலுங்குதேசம் கட்சிக்கு 28 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இக்கட்சிக்கு மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவும் உள்ளது. இதனால், இந்த மசோதாவை இங்கு நிறைவேற்றுவது பெரிய சவாலாக இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (7+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
21-ஜன-202021:23:47 IST Report Abuse
raja முட்டாளுக்கு ஓட்டளித்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம். முதிர்ச்சியற்ற மனிதன்
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-ஜன-202020:25:35 IST Report Abuse
Sivagiri ஸ்லோ பாய்சன் போல இவர் சைலன்ட் ஸ்மைலிங் பாய்சன் - சிரித்து கொண்டே மக்களை பழிவாங்கும் - சாடிஸ்ட் போல . . .
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஜன-202019:55:36 IST Report Abuse
Girija நாயுடு காரு அடுத்த வாட்டி தேர்தலில் உமக்கு பைசா செலவில்லை. தூங்கிகிட்டே ஜெயிக்கலாம். வாரிசுகள் எல்லாமே ...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X