மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (805)
Advertisement
சென்னை: சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசி இருந்தார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த,
Rajinikanth, Rajini, மன்னிப்பு_கேட்க_முடியாது, thuglak50thanniversary, DMK, Murasoli, ரஜினி, ரஜினிகாந்த்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசி இருந்தார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த, 'துக்ளக்' வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க.,வின் 'முரசொலி' நாளிதழ் மற்றும் ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று அப்போது ரஜினி பேசினார்.

இதற்கு, தி.மு.க.,வினர் உட்பட, பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'சேலம் ஊர்வலத்தில் கடவுள்களின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்படவில்லை. தன் பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்; மறுத்தால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள, தர்பார் படத்தை ஓட விட மாட்டோம். அந்த படம் ஓடும் தியேட்டர்கள் முன், போராட்டம் நடத்துவோம்' என, அவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது | Sorry I won't say Sorry | Rajinikanth | Thuglak


latest tamil news
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அவர் பேசுகையில், துக்ளக் விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. நான் இல்லாத விஷயத்தை சொன்னதாக சொல்கிறார்கள். இந்து கடவுள்கள் குறித்து அப்போது சேலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. இல்லாத விஷயத்தை நான் சொல்லவில்லை. நான் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானாதை பேசினேன். உண்மையை தான் பேசி உள்ளேன், ஆகையால் யாரிடமும் மன்னிப்பு, வருத்தம் கேட்க முடியாது. 1971ல் நிகழ்ந்த விஷயம், மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (805)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Bangalore,இந்தியா
26-ஜன-202014:05:56 IST Report Abuse
Ramesh உண்மையை சொல்வதற்கு /சொன்னதற்கு பாராட்ட வேண்டுமே தவிர மன்னிப்பு எதற்கு ? திக , திமுக இந்து தாங்கள் 50+ ஆண்டு காலமாக செய்து வந்த இந்து , பிராமண , ஹிந்தி எதிர்ப்புக்கு அவர்கள் வருந்த வேண்டிய காலம் 2020 முதல் ஆரம்பிக்கும் ...தெய்வம் நின்று கொள்ளும்
Rate this:
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
25-ஜன-202018:45:27 IST Report Abuse
praj மன்னிப்பு கேட்கிறதற்கு பெருந்தன்மை வேண்டும்
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202012:27:14 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  அப்படியில்லப்பா.. தப்பு செஞ்சாதான் மன்னிப்பு கேக்கோணும்.. தப்பு செஞ்சது கருப்பு சட்டை கும்பல்.. தேவையில்லாம இந்த விவகாரத்தை ஊத்தி பெரிதாக்கியது கருப்பு சட்டை.. அதே மாதிரி எவனாவது செய்ங்கடா இனி.. பாப்போம்.. ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
22-ஜன-202020:19:37 IST Report Abuse
Sundar If Rajni lodged political party and it will sweep in the coming assemble election like Jegan mohan and Kejriwal.
Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
28-ஜன-202002:23:01 IST Report Abuse
Thirumuruganபகல் கனவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X