நாடகங்களில் எதிர்பாராமல் நடந்த நகைச்சுவை

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisementlatest tamil news


அது சோவின் நாடகம் தனது மனைவியிடம் பணப்பெட்டியை எடுத்து வரச்சொல்கிறார், பெட்டியை எடுத்து வந்தவர் ஒரு வினாடி தடுமாறியதில் பெட்டி திறந்து கொண்டது உள்ளே எதுவுமே இல்லை பார்த்துக் கொண்டு இருந்த பார்வையாளர்கள் மத்தியில் இருந்து,‛ இப்படி சொதப்பலாமா?' என்பது போல கிண்டலாய் சிரிப்பு சத்தம்.


latest tamil newsபார்த்தார் சோ, உடனே சமயோசிதமாக,‛நான் பணம் இருக்கிற பெட்டிய எடுத்துட்டு வரச்சொன்னா நீ மாற்றி பணமில்லாத பெட்டிய எடுத்துட்டு வந்து நிற்கிற, கொஞ்சமாவது பொறுப்பு வேணாம் இந்தப் பெட்டிய உள்ளே கொண்டு போய் வச்சுட்டு பணம் இருக்கிற பெட்டிய எடுத்துட்டு வா' என்று வசனம் பேசி சமாளித்தார்.
அவரும் அந்தப் பெட்டிய எடுத்துட்டு போய் திரும்பவும் அதே பெட்டியைத்தான் கொண்டுவந்தார் ஆனால் நாடகத்தை பொறுத்தவரை இப்போது அது பணம் உள்ள பெட்டி இப்படி நாடகத்தன்மை கெடாமல் அன்று சோ சமாளித்தார்.
துாணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரா உன் ஹரி? என்று கோபம் கொண்ட ஹிரணியகசிபு பக்த பிரகலாதனைக் கேட்டபடி பக்கத்தில் இருந்த துாணை உடைக்க வேண்டும் அதில் இருந்து நரசிம்மர் வெளிப்பட்டு ஹிரணியகசிபை வதம் செய்யவேண்டும் நரசிம்மன் இருக்கும் துாணை உடைப்பதற்கு பதிலாக ஆவேசத்தில் வேறு ஒரு துாணை ஹிரணிய கசிபு வேடத்தில் இருந்தவர் உடைத்துவிட்டார் உடைந்த துாணிற்கு பின்னால் நாடகவசனத்தை சொல்லித்தருபவர் ‛ஸ்கிரிப்ட் பேடுடன்' நின்று கொண்டு இருக்கிறார் பயங்கர தாமசாகப் போய்விட்டது.
நாடகத்திலேயே சிரமமான இடம் எது என்றால் டெலிபோனில் பேசுவதுதான் நாடகத்தில் இருப்பவர் டம்மி போனில் பேசுவார் பதிலுக்கு உள்ளே இருந்து பேசவேண்டும் அவர் பேசுவதற்குள் பார்வையாளர் பகுதியில் இருந்து யாராவது பேசிவிட்டால் அதுவும் இதுவும் குழம்பிவிடும் ஆகவே குரல் எங்கிருந்து வருகிறது என்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்.
இப்படி நாடகம் போடும் போது ஏற்படும் நகைச்சுவையான விஷயங்களை நாடகஆசரியரான சந்திரமோகன் சுவைபட தொகுத்து திநகர் நகைச்சுவை மன்ற கூட்டத்தில் பேசினார்.இந்த கூட்டத்திற்கு குரோம்பேட்டை நகைச்சுவை மன்ற நிறுவனர் மதனகோபால் தலைமைதாங்கினார் ,திநகர் நகைச்சுவை மன்ற தலைவர் சேகர் வரவேற்றார்.பார்வையாளர்கள் திரளாக கலந்து கொண்டு நகைச்சுவை துணுக்குகள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜன-202011:12:51 IST Report Abuse
Lion Drsekar ஐயா உண்மையாகாவே இது ஒரு நல்ல செய்தி, பாராட்டுக்கள். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X