பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா செய்த தவறு: இயக்குநர் அமீர் தாக்கு

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (45)
Advertisement

சென்னை: '' திமுக ஆட்சியில் எம்ஜிஆர் பெயரில் கருணாநிதி பிலிம்சிட்டி பெயரை, அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து பெயரை மாற்றி, மிகப்பெரிய தவறை செய்து விட்டார்'' என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.





ஜெயலலிதா செய்த தவறு: இயக்குநர் அமீர் தாக்கு


நேற்று (ஜன., 20) சென்னையில் நடந்த 'மாயநதி' படம் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் பேசியதாவது:" எம்.ஜி.ஆர் எப்படி திரைத்துறையிலிருந்து வந்து முதல்வர் ஆனாரோ, அவரைத் தொடர்ந்து பலரும் எம்.ஜி.ஆராக போராடிக் கொண்டே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆட்சியில் இருவருக்கும் நெருக்கமானவர்கள் யாருமே திரைத்துறை சார்ந்த பிரச்சினையை அவர்களிடம் சொல்லவே இல்லை.

காலையும், மாலையும் முதல்வரை சந்திக்கலாம் என இருந்தவர்கள் தங்களை தனித்தனியே வளர்த்து கொண்டனரே தவிர துறை சார்ந்த பிரச்னைகளை சொல்லவில்லை.அப்படிச் சொல்லியிருந்தால் ஹாலிவுட்டிற்கு இணையாகத் தமிழ் சினிமா உருவாகியிருக்கும். திமுகவின் ஆட்சியில் தான் பிலிம் சிட்டி உருவாக்கப்படுகிறது. முதல்வராக இருந்த கருணாநிதி, நினைத்தால் யாருடைய பெயரை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் பெயரைத்தான் வைத்தார்.

அதன் பிறகு முதல்வரான ஜெயலலிதா முதல் வேலையாக, எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி என்ற பெயரை ஜெ.ஜெ பிலிம் சிட்டி என மாற்றினார். இது பெரிய தவறு. அப்போது திரையுலகினர், முதல்வரைச் சந்தித்து பெயரை மாற்றக் கூடாது என கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.





ஆனால், செய்யவில்லை. இங்கு ஒருவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களைப் பாராட்டி விழா எடுக்க வேண்டும். அல்லது கை கட்டி அடிமையாக நிற்க வேண்டும்.

இங்கு அடுத்ததாக இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் எனும்போது, தமிழக அரசு எப்படி விருது கொடுக்கும். உங்களுக்கு. அது அச்சப்படும் அல்லவா? விருது, இடம் என அனைத்தும் கொடுப்போம். ஆனால் கடைசியில் நமக்குப் போட்டியாகக் கட்சி தொடங்குவார்கள் என நினைக்கும். இந்த அச்சத்தின் காரணமாகவே தமிழக அரசு விலகியே நிற்பதாகப் பார்க்கிறேன். முந்தைய முதல்வர் அப்படி தான் இருக்கிறார்.ஆனால், இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படி அச்சப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
24-ஜன-202015:07:08 IST Report Abuse
oce பிலிம் சிட்டி உள் வருமானம் கிடைக்காத பெயர். அதனால் எம்ஜிஆர் பெயரை வைத்தார். எம்ஜியாரே செங்கொலை ஜெயாவிடம் கொடுத்தார். அதனால் அந்த அம்மா தன் பெயரை பிலிம் சிட்டிக்கு வைத்துக்கொண்டார். படுத்துக்கினு போத்திக்கினாலும் போத்திகிட்டு படுத்தாலும் இரண்டும் ஓன்றே.
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
22-ஜன-202006:38:06 IST Report Abuse
arudra1951 கொள்ளைக்காரி இதைவிட மிகப்பெரிய தவறுகள் செய்யவில்லையா ? இப்போது இதுவா முக்கியம்?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜன-202006:12:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழனுக்கு நடிகர்கள் பின்னாடியேதான் கொத்தடிமையா உடைத்தெறியும் ஆனால் இருபாலர் படிச்சுப் பட்டம் வாங்கிருக்குங்க அதனால் தரம்பார்க்க தெரிஞ்சுருக்காங்க சினிமா வெறும் கவர்ச்சிதான் என்று புரிஞ்சுண்டு சினிமாவோட வுட்டுட்டுப் போயினனே இருக்காங்க இது உண்மை சிலஅடிமாட்டா படிப்பே ஏறாத பேக்குகளே தான் நடிகன் என்றால் தைதைன்னுகுதிக்குறானுக, மகளிரணி என்று ஒருகூட்டம் இருக்கே அது வெறும் வெத்துவேட்டு ஒருஇலவும் தெரியாது சிலருக்கு இதோ படிப்பறிவு இருக்குதுங்கோ அதுலேயும் ஊராச்சி பேரூராட்ச்சின்னுதலைவராயிட்டு பெருகுபதவிலேயிருக்குதுங்க ஆட்ச்சியெல்லாம் புருஷன் கைலேதான் என்று நிலைமை ஏன்னா மந்திரிகள் கொடியே சுருட்டினால் இந்தாளுங்க கட்சிபேதமே இன்றி லக்ஷங்களிலே பொரளுவாங்க இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X