ஜூன் 1 முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' அமல்: மத்திய அமைச்சர்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
OneNation_OneRationCard, RamVilasPaswan, June1, Implement, ராம்விலாஸ்_பஸ்வான், அமைச்சர், ஒரேநாடு_ஒரேரேஷன், திட்டம், ஃ

இந்த செய்தியை கேட்க

பாட்னா: 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வரும் 'ஒரே நாடு; ஒரே ரேஷன்அட்டை' திட்டத்தின் மூலம், எந்த மாநிலத்திலும், ரேஷன் அட்டைதாரர்கள், ரேஷன் பொருட்கள் வாங்கலாம். இதற்கு பல மாநிலங்கள் சம்மதம் தெரிவித்தாலும், அங்குள்ள சலுகைகள் பாதிக்கப்படும் என சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், மக்களுக்கு இலவச அரிசி போன்ற திட்டங்கள் கிடைக்கின்றன. ஆனால், வெளி மாநிலங்களுக்கு சென்று வாங்கினால், இந்த சலுகை கிடைக்காது எனவும், மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பொருள் வாங்கினால் இருப்பு பாதிக்கும் எனவும் சில கட்சிகள் கூறி வந்தாலும், ஆளுங்கட்சியான அதிமுக இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


latest tamil news


நாடு முழுவதும் இத்திட்டத்தை ஜன., மாதம் அமல்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக முதல்கட்டமாக ஜன.,1ம் தேதியே 12 மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுவிட்டது எனவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜன-202006:15:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவ்ளோ கோடிமக்களுக்கும் ரேஷன் கார்டு தரங்களாமா என்னன்னா நேக்கு எல்லாம் நோ ரேஷன்கார்டுங்கோ வாங்கவேயில்லீயே இன்னிவரை செட்டியார் கடைலேயோ நாடார் கடைலேயேதான் வாங்கி குடும்பம் தள்ளறோம் முன்னாடி இருந்துது நானே தான் ரேஷன்கடையே க்யுலே நின்னு வாங்கிருக்கேன் ஆனால் இப்போது பல வருஷமா நோ ரேஷன் கார்ட்
Rate this:
Share this comment
Cancel
21-ஜன-202020:20:14 IST Report Abuse
ஆப்பு ரேஷன் கார்டை ஒழிச்சு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்ஜ வழி செய்வதை விட்டு விட்டு இந்தியாவின் எங்கே வேணும்னாலும் போய் பிச்சை எடுக்கலாம்னு சொல்றாங்க. வறுமையை எப்போ ஒழிப்பாங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X