வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிவகாசி: சிவகாசி, கொங்கலாபுரத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 3ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று (ஜன.,20) பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின் மாயமானார். அவரை, பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தீவிரமாக தேடினர். சிறுமி கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை முட்புதர் அருகே, அந்த சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையறிந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதி மக்களிடம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.