அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி மூலப்பத்திரத்தை காட்டுங்க: தி.க.,வினரை சீண்டிய ஹெச்.ராஜா

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (100)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: ஈ.வெ.ரா., குறித்து தான் பேசியதற்கு ஆதாரங்களை செய்தியாளர்களிடம் காண்பித்தார் ரஜினிகாந்த். இதைச் சுட்டிக்காட்டி, தி.க.,வினரை பாஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.



latest tamil news


சென்னை கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த துக்ளக் வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், 1971ம் ஆண்டு சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத உருவங்கள் கொண்டு செல்லப்பட்டன என பேசியிருந்தார். ஈ.வெ.ரா., குறித்து, அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். 'தவறான கருத்தை கூறியதற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.


latest tamil news


இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ரஜினி, இல்லாத விஷயத்தை தவறாக சொன்னதாக சொல்கிறார்கள். இந்து கடவுள்கள் குறித்து அப்போது சேலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. அதனை தான் குறிப்பிட்டேன். இதற்காக மன்னிப்பு கேட்கமாட்டேன், எனக்கூறி அந்த பத்திரிக்கை செய்திகளின் நகலையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

இது தொடர்பாக பாஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திரு. ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு தி.க.,வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
28-ஜன-202013:52:34 IST Report Abuse
Divahar பாபர் மசூதிக்கு இவர்கள் மூல பத்திரம் வைத்து வாங்கினார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-202015:24:56 IST Report Abuse
Yaro Oruvan மூலம் இருக்கு.. பத்திரமா பாத்துக்குறேன்.. மூலம்பத்திரம். ரொம்ப குஷ்டமா இருக்கு.. வேணும்னா நான் பத்திரமா பாத்துகிற மூலத்த நீங்க வந்து பாத்துகோங்கோ - இப்படிக்கு தி க சொத்துக்களை அனுபவிக்கும் ஆண்டிமணி..
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
23-ஜன-202016:42:49 IST Report Abuse
natarajan s மூல பத்திர விவகாரத்தில் புதுசாக ஒரு கோரிக்கை இதை தாழ்த்தப்பட்டோர் கமிஷன் விசாரிக்கக்கூடாதாம், இது சிவில் மேட்டர் சிவில் நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டுள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X