குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது: அமித்ஷா

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
குடியுரிமைசட்டம், உள்துறைஅமைச்சர்அமித்ஷா, அமித்ஷா, காங்கிரஸ், ராகுல், எதிர்க்கட்சிகள், வன்முறை, திரிணமுல், பாஜ, ராகுல்காந்தி, பாகிஸ்தான், பாக், HMAmitshah, amitshah, Rahulgandhi, rahul, CAA, pakistan, congress, cong, trinamoolcongress, TMC, HOmeministeramitshah, amitshah ,

இந்த செய்தியை கேட்க

லக்னோ: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராடிக்கொள்ளலாம். ஆனால், நாங்கள் பின்வாங்க மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக லக்னோவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு அமித்ஷா பேசியதாவது: பொய் பிரசாரம் மூலம் நாட்டை பிரிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கவே, இந்த பேரணி நடக்கிறது. பாகிஸ்தான் சொல்வதை காங்கிரஸ் வழிமொழிகிறது. பாகிஸ்தான் மொழியில் ராகுல் பேசி வருகிறார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணமுல் கட்சிகள் வன்முறையை தூண்டி விடுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து, எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதற்கான இடத்தை தேர்வு செய்ய முடியுமா என ராகுல், மம்தா, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு சவால் விடுகிறேன்.


latest tamil news


சுதந்திரத்தின் போது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனில் இருந்த சிறுபான்மையினர் இன்று பெரும்பாலான அளவு குறைந்துவிட்டனர். அவர்கள் எங்கு செல்வார்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டும் என கேட்கிறேன். யாரின் குடியுரிமையையும் பறிப்பதற்கான அம்சம், குடியுரிமை சட்டத்தில் இல்லை. குடியுரிமை வழங்கவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. நேரு செய்ய முடியாததை மோடி செய்துள்ளார். முத்தலாக் மசோதாவையும் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராடலாம். நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

ராமர்கோயில் கட்டுவதை காங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தி வந்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில், ராமர்கோயில் கட்டுமானப் பணி, 3 மாதத்தில் துவங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Udumalipettai ,இந்தியா
22-ஜன-202013:01:41 IST Report Abuse
Muthu இந்த CAA எதிர்ப்பவர்கள் : ஒரு வகை , சட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் , புரியவும் விரும்பாமல் மற்றவர் சரியாக புரிந்துகொண்டும் , தனி மனித துவேசம் , மதம் அடிப்படையிலான வெறுப்பு மற்றும் சொந்த நலனுக்கு தேச நலனை காவு கொடுக்கும் தேச துரோகிகள். பொது மக்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது, தற்போதும் ஏற்கனவே இருக்கும் பழைய இந்திய குடியுரிமை சட்டம் / அல்லது /புதிதாக குடியற விண்ணப்பிக்கும் வழி முறைகள் (எந்த நாட்டினருக்கு , எந்த மதத்தினருக்கும் பொதுவானது ) அப்படியேதான் உள்ளது . அதில் எந்த மாற்றமும் செய்ய வில்லை / மறுக்கவோ இல்லை. இந்த CAA என்பது நம் நாட்டில் மிக நீண்ட காலமாக மத துவேசத்தால் விரட்டியடிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் சில ஆயிரம் பேர்களுக்கு ஒரு சலுகை வழங்க வழி கொடுக்கும் ஒரு திருத்தம் மட்டுமே . இதில் எங்கே இந்தியா மக்களுக்கு பாதிப்பு, இந்தியா முஸ்லிம்களுக்கு பாதிப்பு, புதிதாக குடியுரிமை கோரும் எந்த நாட்டவருக்கு , எந்த மதத்தினருக்கும் மறுப்பு உள்ளது என அறிய வேண்டும். அப்போ பழைய சட்டம் சரியானது இல்லையா ? அந்த போராட்ட இந்தியா துரோகிகள் விளக்க வேண்டும் . மக்கள் அவர்களை கேள்வி கேட்க வேண்டும் ? உண்மையில் இந்தியா அரசு /பிஜேபி, குழம்பி நிற்கும் பொது மக்களிடம் இந்த தெளிவான விளக்கத்தை அடைய செய்ய இதுவரை சரியாக செயல் படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இனியாகிலும் அந்த தீவிர செய்கையில் அரசு/ பிஜேபி முனைந்து செயல் பட வேண்டும் அப்போது மட்டுமே, இந்த சரியாக புரிதல் இல்லாமல் உள்ள மக்களின் ஆதரவையும் பெற முடியும் . மக்களை ஏமாற்றும் துரோகிகளை தோலுரிக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-ஜன-202012:21:56 IST Report Abuse
Malick Raja வினை விதைத்தால் வினையைத்தான் அறுவடை செய்யமுடியும் ..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-ஜன-202012:07:00 IST Report Abuse
Malick Raja இந்தியாவில் CAA.வராது வரவும் முடியாது வரவும் கூடாது .. மக்களுக்காக சட்டம் இருக்கவேண்டுமே தவிர சட்டத்திற்காக மக்கள் இருக்க முடியாது .. ...
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
23-ஜன-202000:55:38 IST Report Abuse
Aarkayமக்கள் CAA, NRC வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள் தீவிரவாதத்தை அல்ல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X