இந்த செய்தியை கேட்க
சென்னை: ரஜினியின் இன்றைய பேட்டியை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ரஜினி குறித்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆனது.
சென்னையில் 'துக்ளக்' விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது, சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள் ராமர், சீதை சிலைகள் உடை இல்லாமல் எடுத்து சென்றனர் என பேசினார். இந்த பேச்சுக்கு திமுக உள்பட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து இன்று நிருபர்களை சந்தித்த ரஜினி, இல்லாத விஷயத்தை நான் பேசவில்லை. நான் கேள்விபட்டதை, பத்திரிகைகளில் வெளியானதைதான் பேசினேன். யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறினார்.

இதனையடுத்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகியுள்ளன. ''#Rajinikanth, #மன்னிப்பு_கேட்க_முடியாது, #ரஜினிகாந்த்'' உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகியுள்ளன. இதில் ஏராளமானோர் ரஜினிக்கு ஆதரவாகவும், புகழ்ந்தும், மற்றவர்கள் விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE