அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியின் கருத்துக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (119)
Share
Advertisement
மன்னிப்பு_கேட்க_முடியாது,Rajini,Rajinikanth,,ரஜினி,ரஜினிகாந்த்,subramanianswamy, Udayanithi, சுப்ரமணியன்சாமி, உதயநிதி, உதயநிதிஸ்டாலின்

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'துக்ளக்' இதழ் விழாவில் விழாவில் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானதை தான் பேசினேன். அதனால், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினி கூறியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


latest tamil news





சிந்தித்து பேச வேண்டும்



latest tamil news


Advertisement

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். ரஜினியிடம் நான் ஒன்றை விரும்பி கேட்டு கொள்கிறேன். நடிகர் ரஜினி, ஈ.வெ.ரா., குறித்து யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என்றார்.


உதவ தயார்



latest tamil news



பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி வெளியிட்ட அறிக்கை: 1971 ல் நடந்த ஈ.வெ.ரா., பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்து சென்றது உண்மை. இதனை, சோ 'துக்ளக்கில்' பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த், தனது கருத்தில் உறுதியாக இருந்தால் தேவைப்பட்டால், ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


மன்னிப்பு கேட்பார்


latest tamil news


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வெளியிட்ட அறிக்கை: ஈ.வெ.ரா., விவகாரத்தில், நடிகர் ரஜினி உண்மை தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார். ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்ததும் கர்நாடகாவில் ரஜினி மன்னிப்பு கோரினார். இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியதாவது:


முழுமையாக அறிந்த பின் கருத்து கூற வேண்டும்



ஈ.வே.ரா கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்படவேண்டியவை என்றும், என்னை போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய ஈ.வே.ராவே காரணம். ஈ.வே.ராவின் கருத்துக்களை முழுமையாக அறிந்த கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
22-ஜன-202017:09:15 IST Report Abuse
S.P. Barucha எம்.ஆர். ராதா வீட்டு வாடகை கொடுக்காததால் அவர் குடியிருந்த ரூமை பூட்டிவிட்டு, உடைமைகளை தூக்கி பெரியார் வீசிவிட்டார் . இது உண்மையா ? பொய்யா ? பெரியார் இந்த விஷயத்தில் சிறியார் ஆகிவிட்டார்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-ஜன-202012:24:23 IST Report Abuse
Sridhar அந்த கன்னட வெறியன் தமிழனின் எதிரி சொரியானுக்கு இவ்வளவு அரசியல்வாதிகள் ஆதரவா? இத்தனைக்கும் அந்த ஆளுக்கு மக்கள் ஆதரவே என்றுமே இருந்தது இல்லை, ஒரு தேர்தலிலும் நின்னது கிடையாது.திமுகவுக்கும் சொரியனுக்குமே அந்த காலத்தில் அசிங்க அசிங்கமாக சொற்போர்கள் நடக்கும். இப்போது அந்தகால உண்மைகள் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் பேசுகிறார்களோ?
Rate this:
chenar - paris,பிரான்ஸ்
22-ஜன-202019:46:07 IST Report Abuse
chenarபாவம் தந்தை பெரியார் உங்களை உங்கள் இனத்தை உங்கள் மொழியை சமஸ்கிருதத்தை மொத்தமாக ஒழித்துவிட்டார் போல ..?...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜன-202011:44:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni மக்கள்பணத்தை கொள்ளைஅடிச்சுக்கோபுரத்துலே குத்தினாலும் உளைசகாசு இல்லீயே ஆப்ஸ் என்ன எவ்ளோமுதல்பொட்டிகையென்று எல்லோரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X