சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிட்நைட்டில் விழுந்த மிடில் பெர்த்: 2 பயணிகள் காயம்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (28)
Advertisement
Train, MiddleBerth, LowerBerth, Chennai, ரயில், மிடில்பெர்த், படுக்கைவசதி, லோயர்பெர்த், சென்னை

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்ற ரயிலின் 'மிடில் பெர்த்' நடுராத்திரியில் கழன்று விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.

வெளியூர் செல்பவர்கள், பாதுகாப்பான பயணமாக கருதுவது ரயில் பயணமே. அதில் தான் சிரமமின்றி பயணம் செய்யலாம் என்பது அனைவரின் கருத்து. இரவு நேரப்பயணத்தில் தூங்கிக்கொண்டே செல்ல, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளில், வயதானவர்களின் முதல் சாய்ஸ், 'லோயர் பெர்த்' தான். ஆனால், அதிலும் ஆபத்து நிகழ்ந்தால் என்னாவது. சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று (ஜன.,20) இரவு 7:20 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் எஸ்10 பெட்டியில் 'லோயர் பெர்த்தில்' இருந்தவரின் மீது படுக்கை கழன்று விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.




அந்த ரயிலில் எஸ்10 பெட்டியின் 35ம் எண் கொண்ட 'லோயர் பெர்த்' படுக்கையில் கடம்பூரை சேர்ந்த தர்மராஜ் (70) தூங்கிக்கொண்டிருந்தார். நடுஇரவில் திடீரென மிடில் பெர்த் படுக்கை கழன்று விழுந்தது. கீழே படுத்திருந்த தர்மராஜ் மீது விழுந்ததில் 2 பேரும் காயமானார்கள். சப்தம் கேட்டு பக்கத்து படுக்கையில் இருந்த சக பயணிகள் எழுந்து வந்து, இடுக்கில் இருந்த இருவரையும் மீட்டனர்.

மதுரை ரயில் நிலையம் வந்ததும், அங்கிருந்த ஊழியர்கள் படுக்கையை சரிசெய்ய முயன்றதாகவும், அதனை சரி செய்ய இயலவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் அரை மணிநேர தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பியது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜன-202011:51:38 IST Report Abuse
Bhaskaran அறுபது வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக lower பெர்த் தரமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
24-ஜன-202012:16:06 IST Report Abuse
karutthu இதற்கு நான் சைடு லோயர் பரர்த் தான் கூடுமானவரை விரும்புவேன் ஆன் லைன் புக்கிங் செய்யும்போது அது கிடைப்பதில்லை .
Rate this:
Share this comment
Cancel
Iyyappan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202004:24:26 IST Report Abuse
Iyyappan தமிழன் அடிப்படையில் புத்திமான். சங்கீலிய முறுகி உயரத்தை கூட்டி குறைக்க முடியும். இது தெரியலையா ? அசிங்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X