பொது செய்தி

இந்தியா

உபேர் ஈட்ஸ்-ஐ 'சாப்பிட்ட' சொமேட்டோ

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (1)
Advertisement
UberEats, Zomato, Acquires, Food, உபேர்ஈட்ஸ், ஊபர்ஈட்ஸ், சொமேட்டோ, உணவு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: முன்னணி உணவு விநியோக வணிகமான உபேர் ஈட்ஸ்-ஐ, சொமேட்டோ நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், உணவு விநியோக வணிகத்தில் சொமேட்டோ, ஸ்விகி, உபேர் ஈட்ஸ் போன்றவை முன்னணியில் உள்ளன. இதில், உபேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உணவு விநியோக வணிகமான உபேர் ஈட்ஸ் சேவை, இந்தியாவில் 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. போட்டியாக பல நிறுவனங்கள் வந்ததால், தனது விற்பனையை பெருக்க முடியாமல் உபேர் ஈட்ஸ் தவித்தது.

இதனால், உபேர் ஈட்ஸ் சேவையை, மற்றொரு போட்டியாளரான சொமேட்டோவிடம் விற்றுள்ளது. இதற்குப் பதில் சொமேட்டோ 10 சதவீத பங்குகளை உபேருக்கு வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த பங்கு மதிப்பு 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், ரூ.2489 கோடி) என கூறப்படுகிறது.




உபேர் ஈட்ஸ் விற்கப்பட்டதால் அதன் தொடர்பில் இருந்த நேரடி உணவகங்கள், டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் பயனாளர்கள் சொமேட்டோ உடன் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்கள் உபேர் ஈட்ஸ் ஆப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சொமேட்டோ சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உபேர் ஈட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் உபேர் ஈட்ஸை, சொமேட்டோ வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளோம். இதனால், இனி உபேர் ஈட்ஸில் இருந்து ஆர்டர் செய்ய முடியாது.
ஆனால், சொமேட்டோவில் உங்களுக்கு பிடித்தமான உணவை சலுகைகளுடன் பெறலாம். உபேர் ஆப் மூலம் கால்டாக்சி சேவை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்; அதனை பயன்படுத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜன-202017:04:46 IST Report Abuse
Endrum Indian உபேர் ஈட்ஸ் ஆரம்பித்ததே இப்படி விற்பனை நல்ல வளர்ந்த பின் விற்பனை செய்யத்தானே இந்த மாதிரி சோமட்டோ நிறுவனத்துக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X