பொது செய்தி

தமிழ்நாடு

தர்பார் டிக்கெட் ரூ.1200க்கு விற்பதா: ரஜினியை வம்புக்கிழுக்கும் சுபவீ

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (106)
Advertisement
Rajinikanth, SubaVeerapandian, Darbar, BlockTicket, Corruption, ரஜினிகாந்த், ரஜினி, சுபவீ, சுப_வீரபாண்டியன், தர்பார், பிளாக், டிக்கெட், ஊழல்

இந்த செய்தியை கேட்க

சென்னை: நேர்மை பற்றியும், ஊழலை ஒழிப்பது பற்றியும் பேசும் ரஜினி, தர்பார் திரைப்படத்தின் டிக்கெட் கள்ளத்தனமாக ரூ.1200க்கு விற்கப்பட்டதை கண்டித்திருக்கிறாரா, என திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர், சுப.வீரபாண்டியன் வம்புக்கு இழுத்திருக்கிறார்.




சென்னையில் நடந்த, 'துக்ளக்' விழாவில், நடிகர் ரஜினிகாந்த், '1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்து சென்றனர். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ, துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இது, அப்போதைய தி.மு.க., அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதால், அந்த இதழுக்கு தடை விதிக்கப்பட்டதால் 'பிளாக்'கில் விற்கப்பட்டதை வாங்கி படித்தேன்,' என்றார்.




இது குறித்து சுப.வீரபாண்டியன் கூறியுள்ளதாவது: 1971ல் 10 ரூபாய்க்கெல்லாம் எந்த ஏடும் விற்கப்படுவதில்லை. அன்றைக்கு 50 காசு, 1ரூபாய் என தான் விற்பனையாகி இருக்கும். அப்படியே 'பிளாக்கில்' விற்றிருந்தால், ரஜினி கண்டனம் அல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அதை தான் தர்பார் டிக்கெட்டும் பிளாக்கில் விற்கிறது, துக்ளக்கும் பிளாக்கில் விற்கிறது என கூறினேன்.
பிளாக்கை ஆதரிப்பவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? எனவே அப்போதே 'சிஸ்டம்' கெட்டு போய்விட்டதாக நினைக்கிறேன். நேர்மை பற்றியும், ஊழலை ஒழிப்பது பற்றியும் பேசும் ரஜினி, தர்பார் திரைப்படத்தின் டிக்கெட் கள்ளத்தனமாக ரூ.1200க்கு விற்பதை கண்டித்திருக்கிறாரா? ஊழலை முதலில் அவரது வீட்டில் இருந்து ஒழிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
27-ஜன-202018:34:20 IST Report Abuse
karutthu சுப .வீ யார் இந்த ஆளு ??? எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
23-ஜன-202016:21:24 IST Report Abuse
mukundan ஜல்லிக்கட்டுல மாட்டை காப்பாத்தணும்னு சொல்லிக்கிட்டு, அப்புறம் மத்திய அரசு மாடு சாப்பிடுறதை தடை பண்ண கூடாதுன்னு கொடி புடிச்ச ரெட்டை வாய் ஆளு தானே இந்த சுகவீ. இப்படி மாத்தி மாத்தி பேசுறதே வழக்கமா போச்சு இந்த தி.க. கரங்களுக்கு. ராத்திரி எப்புடி தான் தூக்கம் வருதோ இவிங்களுக்கு தெரியலை.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
23-ஜன-202002:58:34 IST Report Abuse
Ramasami Venkatesan அரசியல்வாதிகள் பலர் (சிலர் நீங்கலாக) லஞ்சம் மற்றும் நிதி என்ற பெயரில் கட்டாய வசூல் முதல் போடாமல் அதற்கும் பல கோடிகள் முதல் போட்டு எடுக்கப்படும் படத்தில் போட்ட முதலை எடுப்பதும், லாபம் சம்பாதிப்பதும் பிசினஸ். இது சிந்திக்க கூடியவர்கள் அனைவரும் அறிந்ததே ஏன் சிலருக்கு புரியாத புதிராக உள்ளது. தமிழக அரசியலில் இந்த வியாபாரம், அமோகம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X