அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (205)
Share
Advertisement
சென்னை:1971 ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி ஈ.வே.ரா தலைமையில் தி.க.,சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் பற்றி ஆபாசமாக சித்தரித்து படங்கள் சிலைகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இப்படி நடந்தது என ரஜினி துக்ளக் விழாவில் பேசி இருந்தார். ஆனால் அதனை தி.க., மற்றும் தி.மு.க., கட்சியினர் மறுத்தனர். அன்றைய தினம், ‛தினமணி' நாளிதழில் வெளியிடப்பட்ட
Rajni,1971,Paper_Publish,ரஜினி,தினமணி,

சென்னை:1971 ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி ஈ.வே.ரா தலைமையில் தி.க.,சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் பற்றி ஆபாசமாக சித்தரித்து படங்கள் சிலைகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இப்படி நடந்தது என ரஜினி துக்ளக் விழாவில் பேசி இருந்தார். ஆனால் அதனை தி.க., மற்றும் தி.மு.க., கட்சியினர் மறுத்தனர். அன்றைய தினம், ‛தினமணி' நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:


latest tamil newsஜன. 26- திராவிடக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையொட்டி நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் இன்று 700 பேர்களுக்கு மேல் கூடி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஹிந்து புராண புருஷர்களை பற்றி ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள் கொண்ட அட்டைகளை ஊர்வலத்தில் தாங்கிச் சென்றனர். முருக கடவுள் பிறப்பை பற்றி ஆபாசமான அட்டைகள் இருந்தன. 10 அடி உயரமுள்ள ராமர் சிலை ஒன்று ஒரு வண்டியில் கொண்டு வரப்பட்டது. வண்டிகளில் பலர் நின்று கொண்டு செருப்புகளால் ராமர் சிலையை அடித்துக்கொண்டே இருந்தனர். ஊர்வலத்தின் முடிவில் மரத்தினால் செய்யப்பட்டிருந்த ராமர் சிலை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

தெய் பக்தி உள்ளவர்களின் உணர்ச்சிகளை புண்படுத்தும் இத்தகைய ஆபாச அட்டைகள் கொண்ட ஊர்வலத்தை அதிகாரிகள் தடுக்காதது பற்றி நகர மக்கள் ஆச்சர்யம் தெரிவித்தனர். மாநாட்டின் நிர்வாகிகள் எந்த மாதிரியான அட்டைகள் கொண்டு பரப்ப போகிறார்கள் என்ற விபரம் தனக்கு தெரியாது என்று போலீஸ் சூப்பிரண்டென்ட் கூறினார்.

ஊர்வலக்காரர்களுக்கு பயந்து பல கடைகள் மூடப்பட்டிருந்தன. திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா ஊர்வலத்தின் கடைசியில் ஒரு டிராக்டரில் அமர்ந்து பவனி வந்தார். ஊர்வலத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டென்ட் காரியாலயத்திற்கு அருகே காத்துக்கொண்டிருந்தனர்.

ஊர்வலம் அந்த இடத்தை நெருங்கியுடன் தடிகள், கத்திகள், வாள்கள் போன்ற ஆயுதங்களுடன் ஊர்வலத்தில் இருந்தவர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வந்தனர். ஆனால் போலீசார் சரியான சமயத்தில் தலையிட்டு எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்த்தனர். ஊர்வலக்காரர்கள் கடவுள் எதிர்ப்பு கோஷங்களுடன் வந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு கொடிகளுடன் ஈ.வெ. ரா எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.


கற்பு பற்றி அரசுக்கு ஈ.வெ.ரா. கோரிக்கை


திராவிடக்கழக தலைவர் ஈ.வெ.ரா. தலைமையில் இன்று ( ஜன. 24, 1971) சேலத்தில் நடை பெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மகாநாட்டில் கற்பு பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறர் மனைவியை அபகரிப்பது, இந்திய பீனல் கோர்டின் கீழ் ஒரு குற்றமல்ல என்று விவாதிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு சர்க்காரை கேட்டுக்கொள்வதாக அத்தீர்மானம் கூறுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (205)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202017:10:40 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  நன்றி ரஜினி சார்.. உங்கள் மூலமாக கயவர்களின் கூட்டு களவாணி குட்டு வெளிப்பட்டது.. நெறயபேருக்கு தெரியாது.. அவனுவளே ஊதி ஊதி பெருசாக்கி புண்ணாக்கிகிட்டானுவ.. ஆப்பசைத்த குரங்குன்னு எது சொல்லுவாங்களே.. அந்த மாதரி ஆப்பசைத்த பகுத்தறிவு பன்னாடைகள்.. ஹா ஹா
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
26-ஜன-202012:45:37 IST Report Abuse
oce ரஜினி கூறியதை மீடியா உலக்த்துக்குள் வராத சாதாரண பாமரன் கூறி இருந்தால் அரசியல் வாதிகள் இப்படி துள்ளி இருக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
26-ஜன-202012:43:15 IST Report Abuse
oce முருக கடவுள் சிவனிடம் அவதரித்தவர் இல்லை. இதை அன்றைய திராவிட பகுத்தறிவு கருவூலங்கள் புரிந்து கொள்ள வில்லை. முருகரும் விநாயகரும் வளர்ப்பு பிள்ளைகள். முருகனின் பிறப்புக்கு களங்கம் கற்ப்பிப்பது மூடத்தனம். அன்று ராமரை செருப்பால் அடித்தவர்கள் வருங்காலத்தில் அதே நிலைக்கு தள்ளப்படுவார்கள். தெய்வம் நின்று கொல்லும்.
Rate this:
Hari - chennai,இந்தியா
26-ஜன-202017:28:46 IST Report Abuse
Hariதினமும் செருப்படி ,ஓசி சோறு சாப்பிடடாலும் செருப்படி வாங்கியபின் தான் ஓசி சோறு கிடைக்கும் எல்லாம் தமிழ் கடவுள் முருகனின் திருவிளையாடல்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X