ஒளிமயமான எதிர்காலம்

Added : ஜன 21, 2020
Advertisement
 ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம்

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு 370, மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது. அது ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த இரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி, நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களுக்கு, ஒளியமயான எதிர்காலம் காத்திருக்கிறது.கிரண் ரிஜிஜுஇளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர், பா.ஜ.,
தாக்குதலை எதிர்பார்க்கலாம்

நடப்பு நிதியாண்டில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.8 சதவீதமாக இருக்கும் என, சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். இது மேலும் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, சர்வதேச நிதியம் மற்றும் கீதா கோபிநாத் மீது, மத்திய அமைச்சர்கள் கடும் கண்டன தாக்குதல்கள் நடத்துவர் என்பதை எதிர்பார்க்கலாம்.சிதம்பரம்முன்னாள் மத்திய நிதி அமைச்சர், காங்கிரஸ்
இளைஞர்களுடன் உரையாடுங்கள்
பண மதிப்பிழப்பு மற்றும் தவறாக நடைமுறைபடுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., கொள்கையால், வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைவாய்ப்பு குறித்து, நம் இளைஞர்களுடன், பிரதமர் மோடி உரையாட வேண்டும். அப்போது தான், இளைஞர்களின் மனதில் இருப்பதை, அவர் புரிந்து கொள்ள முடியும்.சீதாராம் யச்சூரிபொது செயலர், மா.கம்யூ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X