அண்டை நாடுகளுடன் போக்குவரத்து சுலபமாக்கப்படும்: பிரதமர் மோடி

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 அண்டை நாடுகள், போக்குவரத்து, சுலபம், பிரதமர், மோடி

புதுடில்லி :''இந்தியா உடன் நட்பாக உள்ள அனைத்து அண்டை நாடுகளுடனும் போக்குவரத்தை சுலபமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

இந்தியா - நேபாளம் எல்லையில், ஜோக்பனி - பிராட்நகர் இடையே, 260 ஏக்கர் பரப்பில், 140 கோடி ரூபாய் செலவில், இரண்டாவது ஒருங்கிணைந்த சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதை, டில்லியில் இருந்து பிரதமர் மோடியும், நேபாள தலைநகர் காத்மண்டுவில், பிரதமர் கே.பி.சர்மா ஒலியும், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து மோடி பேசியதாவது:இந்தியா, அருகே உள்ள நட்பு நாடுகள் அனைத்துடனும், போக்குவரத்து வசதியை எளிமையாக்க உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம், வர்த்தகம், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில், பரஸ்பரப் பயன் பெறலாம். இந்தியாவும், நேபாளமும், பரஸ்பரம் சாலை, ரயில் மற்றும் தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக, பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வருகின்றன.

அவற்றுள் ஒன்றான, ஒருங்கிணைந்த சுங்கச் சாவடி, இரு நாடுகள் இடையே பரஸ்பரம் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் அதிகரிக்க உதவும்.இவ்வாறு, அவர் கூறினார். நேபாளத்தில், 2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் கட்டப்படும் இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகளை, மோடியும், சர்மா ஒலியும் பார்த்தனர்.இதையடுத்து மோடி பேசும்போது, ''45 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகளும் விரைவில் கட்டி முடித்து, நேபாள சகோதர, சகோதரிகளுக்கு வழங்கப்படும்,'' என்றார்.


8 இந்தியர்கள் பலி



கேரளாவைச் சேர்ந்த, 15 பேர், நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பொகாரா மலைச் சிகரத்தை கண்டு ரசித்த பின், ஊர் திரும்பும் வழியில், டாமன் நகரில் உள்ள, 'எவரெஸ்ட் பனோரமா' விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது, 'ஹீட்டர்' சாதனத்தில் இருந்து வாயு கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத் திணறி, இரு தம்பதியர் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் உட்பட, எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து விடுதி மேலாளர் கூறியதாவது:சுற்றுலா பயணியர், நான்கு அறைகளை பதிவு செய்தனர். அதில் இரு குடும்பத்தினர் மட்டும், ஒரே அறையில் தங்கியுள்ளனர். அதில் அனைத்து ஜன்னல்களும் உள்பக்கம் தாழிடப்பட்டுள்ளன. அறைக்கு வெப்பம் அளிக்கும் சாதனத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என, தெரிகிறது.

இதனிடையே உயிரிழந்தோரின் உடல்களை, கேரளாவுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நேபாளத்தில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.


முதல்வர் இரங்கல்

கேரள முதல்வர் பினராயி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'நேபாளத்தில், கேரளாவைச் சேர்ந்த எட்டுபேர் உயிரிழந்ததற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். உயிரிழந்தோரின் உடல்களை விரைவாக கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-ஜன-202009:03:05 IST Report Abuse
blocked user இலங்கைக்கு பாலம் அமைத்தால் தும்பிகள் இலங்கை சென்று இராஜபக்ஷேவின் இரத்தத்தை குடித்து விட்டு ஓடி வந்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
22-ஜன-202004:13:10 IST Report Abuse
ஆப்பு நேபாளத்திடம் ஏராளமான பழைய ரூவாய் நோட்டுக்கள் மாற்ற முடியாமல் முடங்கிப் போயின. அதனால் இரு நாடுகளிடையே உறவில் தொய்வு வந்தது. அதை சரி செய்ய 50000 வீடுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X