அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உண்மையை தான் பேசினேன்; மன்னிப்பு கேட்க முடியாது' : ரஜினி திட்டவட்டம்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (87+ 1268)
Advertisement
Rajini, ரஜினி, மன்னிப்பு, கேட்க முடியாது,துக்ளக் விழா

சென்னை:''நான் இல்லாதது எதையும் சொல்லவில்லை. பத்திரிகையில் வந்த செய்தியை தான் சொன்னேன். நான் பேசியதற்காக, மன்னிப்பு கேட்க முடியாது. இது, மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

சென்னையில் நடந்த, 'துக்ளக்' வார இதழ் விழாவில், ஈ.வெ.ரா., குறித்து, ரஜினி பேசிய பேச்சுக்கு, திராவிட கழகத்தினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, ரஜினி மீது, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈ.வெ.ரா., குறித்த பேச்சுக்கு, ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என, சிலர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சில அமைப்பினர், நேற்று சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

இது தொடர்பாக, ரஜினி தன் வீட்டில், நேற்று அளித்த பேட்டி:பத்திரிகை விழாவில், நான் பேசிய பேச்சு, சர்ச்சையாகி உள்ளது. நான் சொன்ன மாதிரி, ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கின்றனர். 'அவுட்லுக்' ஆங்கில இதழ் உள்ளிட்ட பத்திரிகைகளில் வந்த செய்தியை தான், நான் பேசினேன். சேலத்தில், 1971ல், ஈ.வெ.ரா., நடத்திய பேரணி யில், கடவுள் உருவ பொம்மைகளுக்கு உடையில்லாமல், செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக எடுத்து வந்ததாக, அந்த செய்தியில் கூறியுள்ளனர்.
கற்பனையாக, நான் எதையும் பேசவில்லை; இல்லாததையும் சொல்லவில்லை. நாளிதழ்களில் வந்ததை தான் கூறினேன். நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்பதை, தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன். என் பேச்சை, நான் இப்போது தெளிவுப்படுத்தி இருக்கிறேன். நான் பார்த்ததை தான் பேசுகிறேன். அவரவர் பார்த்ததை, அவர்கள் பேசுகின்றனர். இது, மறுக்கக்கூடிய சம்பவம்இல்லை; ஆனால், மறக்க வேண்டிய சம்பவம்.இவ்வாறு, ரஜினி கூறினார்.


'ரஜினி கொஞ்சம் யோசித்து பேசணும்' வேண்டும்: ஸ்டாலின்''ஈ.வெ.ராமசாமியை பற்றி, நடிகர் ரஜினி பேசும் போது, கொஞ்சம் யோசித்து, சிந்தித்து பேச வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார். சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிக்கும் வகையில், அடுத்த கட்டமாக, என்ன செய்யலாம் என்பதற்காக, வரும், 24ம் தேதி, தி.மு.க., தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, முடிவு எடுக்க உள்ளோம்.

'ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, மக்களின் கருத்துகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என, பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்' என, ஏற்கனவே, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார்.தற்போது, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதியிருக்கிறார். ஒரு நாடகம் நடந்து கொண்டுஇருக்கிறதே தவிர, உள்ளப்படியே தைரியத்துடன் கேட்கக் கூடிய தெம்பு, இந்த அரசுக்கு இல்லை.

ரஜினி அரசியல்வாதி அல்ல; அவர் ஒரு நடிகர். தமிழ் இனத்திற்காகவே, 95 ஆண்டு காலம் வாழ்ந்து போராடி, சமுதாயத்திற்காக வாழ்ந்து காட்டிய, ஈ.வெ.ராமசாமியை பற்றி பேசும் போது, கொஞ்சம் யோசித்து, சிந்தித்து பேச வேண்டும். இது, ரஜினிக்கு என் அன்பான வேண்டுகோள்.
இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.


ரஜினி கருத்துக்கு தேவநாதன் ஆதரவு'மன்னிப்பு கேட்க வேண்டியது, தி.க.,வினர் தான்; ரஜினி அல்ல' என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'கடந்த, 1971ல், சேலத்தில், ஈ.வெ.ராமசாமி நடத்திய ஊர்வலத்தில், ராமர், சீதை சிலைகளை, உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்' என, 'துக்ளக்' விழாவில், ரஜினி தெரிவித்திருந்தார். இதை கண்டித்து, திராவிட கழகத்தினர், ரஜினியை கைது செய்ய வலியுறுத்தினர்.

இந்நிலையில், ரஜினி, தான் பேசியதற்காக வருத்தப்படவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என, ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். தமிழகமெங்கும், அவருக்கு பல கோடி ஆதரவு கரங்கள் கைத்தட்டி வரவேற்கின்றன; நாமும் வரவேற்போம். ஹிந்துக்களின் மனம் புண்படும்படி, கோவில் வாசல்களில், கடவுள் இல்லை என்றும், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றும், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட காலம் கடந்து விட்டது.

சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ஏவுகணையை அனுப்புகிற அறிவியல் நிபுணர்கள், திருப்பதியில் பெருமாளை வேண்டி, அனுப்பி வருவதை பார்க்கிறோம். இனிமேலும், கருப்பு சட்டையும், கசப்பை விதைக்கும் கருத்துகளும் எடுபடாது என, தெளிவாக தெரிந்து, மன்னிப்பு கேட்க மறுத்த ரஜினியை, மனமார பாராட்டுகிறேன். பல கோடி ஹிந்துக்கள் மனங்களை புண்படுத்தியதற்காக, மன்னிப்பு கேட்க வேண்டியது, திராவிட கழகத்தினர் தான்; ரஜினி அல்ல.இவ்வாறு, தேவநாதன் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (87+ 1268)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizh Kirukkan - New York,யூ.எஸ்.ஏ
23-ஜன-202007:33:14 IST Report Abuse
Tamizh Kirukkan முதல் முறையாக ரஜினி அவர்கள் மீது மரியாதை பிறக்கிறது எனக்கு. தமிழ் ஆன்மீக புனிதர்களான ராமானுஜர், சங்கரர் என பலர் சமத்துவ சிந்தனை பிறக்க வித்திட்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் யாவரும் சுயநலனுக்காக செய்ததில்லை ஆனால் திக மற்றும் தில்லு முள்ளு கழகம் செய்யும் அரசியல் தாங்க முடியவில்லை. பெரும்பான்மையான இந்து மதத்தில் பிறந்ததே தவறு என சித்தரிக்கும் இந்த கும்பலுக்கு நாம் அனைவரும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் நபர்களே
Rate this:
Share this comment
Cancel
23-ஜன-202000:23:44 IST Report Abuse
திருடன் கடவுள் சிலைகள் உடைத்தால் தக்காளி சட்னி, சொரியானின் சிலையை உடைத்தால் ரத்தம் // பகுத்தறிவு
Rate this:
Share this comment
Cancel
23-ஜன-202000:18:08 IST Report Abuse
திருடன் செறுப்புமாலை சம்பவம், ஆதாரம் இல்லை, ஏற்க முடியாது, ஆனால் குடியுரிமைதர அரசாங்கம் ஆதாரம் ஏதும் கேட்கக்கூடாது // பகுத்தறிவு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X