பா.ஜ.,வுடன் கூட்டணி ஏன்? நிதிஷுக்கு அதிருப்தி தலைவர் கேள்வி

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 21, 2020
Advertisement
பாஜ, கூட்டணி, நிதிஷ், அதிருப்திதலைவர், கேள்வி

பாட்னா :''டில்லியில் பா.ஜ. உடன் கூட்டணி வைத்தது ஏன்?'' என பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ்குமாருக்கு அவர் கட்சியின் தேசிய பொதுச் செயலர் பவன் குமார் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் நிதிஷ் குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: என்னிடம் பா.ஜ. குறித்து பலமுறை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளீர்கள். அக்கட்சி நாட்டை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறது; மக்களை பிரித்தாள்கிறது; அரசு அமைப்புகளின் அதிகாரத்தை பறித்து சீரழிக்கிறது என்றெல்லாம் கூறினீர்கள்.

இவற்றையெல்லாம் தடுக்க ஜனநாயக சோசலிச சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினீர்கள். அத்துடன் இப்பணிக்காக கட்சியின் மூத்த தலைவரையும் நியமித்தீர்கள்.'பா.ஜ.வால் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன்' என்பதையும் தெரிவித்தீர்கள்.

இந்நிலையில் பீகாரைத் தாண்டி டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ. உடன் எதற்காக கூட்டணி வைத்தீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பா.ஜ.வும் அகாலி தளமும் நீண்ட நெடுங்காலமாக தோழமையுடன் இருந்தாலும் டில்லியில் அகாலி தளம் பா.ஜ.வை ஆதரிக்க மறுத்துள்ளது.

ஆனால் நம் கட்சி மட்டும் பா.ஜ.வுக்கு கைகொடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. காந்தி லோகியா ஜே.பி.நாராயண் ஆகிய தலைவர்கள் இன்று இருந்திருந்தால் பா.ஜ. அரசின்குடியுரிமை திருத்தச் சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கடுமையாக எதிர்த்து போராடியிருப்பர்.அத்தகைய பா.ஜ. வை ஐக்கிய ஜனதா தளம் எந்த கொள்கையின் அடிப்படையில் ஆதரிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

மேலும் கட்சித் தலைவரின் தனிப்பட்ட பார்வை ஒன்றாகவும் வெளியே கட்சியின் நிலைப்பாடு வேறாகவும் இருக்க காரணம் என்ன என்பதையும் கூற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இரு இடங்களையும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு ஒரு இடத்தையும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X