அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு ஏன் :ஸ்டாலின் கேள்வி

Added : ஜன 21, 2020 | கருத்துகள் (9)
Advertisement
ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு ஏன் :ஸ்டாலின் கேள்வி

சென்னை,'மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் செல்வது சந்தேகத்தை கிளப்பியுள்ளது' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளார் என்று வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையின் செயலரான இவரின் கீழ் தமிழக கண்ணாடி வலையமைப்பு நிறுவனம் இயங்கியது.இந்நிறுவனம் வாயிலாக மாநிலம் முழுவதும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா 'பிராட்பேண்ட்' இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் திட்டத்தை 2441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்த இருக்கிறது.இந்த நேரத்தில் அந்த பொறுப்பில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி விலகி செல்வது பொது மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நேர்மையாக பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இடம் இல்லை என்ற அவல நிலை உருவாக்கியுள்ளது.தமிழக கண்ணாடி வலையமைப்பு நிறுவனத்திற்கு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தது ஏன்; சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் செல்லும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரா என்பதற்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை காப்பாற்ற தலைமை செயலர் முன்வர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
27-ஜன-202016:53:55 IST Report Abuse
Mano ஆடு நனையுதே என்று ஓநாய் கண்ணீர்விட்டதாம்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-ஜன-202005:45:50 IST Report Abuse
 nicolethomson சுல்தான் சாப் எல்லா ஊரிலும் அரசு கேபிள் போயி scv கேபிள் வந்தது எப்படி என்றும் கேட்டுடப் போறாங்க இவரு விலகுவது உங்க கம்பெனி வலையமைப்பினால் என்று தகவல் கூட சுற்றிவருகிறது
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
25-ஜன-202001:39:40 IST Report Abuse
Aarkay சாத்தான் வேதம் ஓதுகிறது இவர்கள் ஆட்சியில் அதிகாரிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை மறந்திருப்பார் ஆட்சிக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X