காஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

டாவோஸ்: பாக்., பிரதமர் இம்ரான் கான் டாவோஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பினை சந்தித்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.



latest tamil news



உலக பொருளாதாரத்தின் உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் பல நாடுகளில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பாக்., பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பில் சில முக்கிய திட்டங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்பட்டது.

2019 ஜூலை மாதத்தில் வாஷிங்டன்னிற்கு இம்ரான் சென்ற போது டிரம்பை சந்தித்தார். அதன்பிற்கு இந்த மாநாட்டில் சந்தித்து பேசினார். இது அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான தலைவர்களின் மூன்றாவது தலைமைத்துவ சந்திப்பாகும் என்று கூறப்படுகிறது. இதில் காஷ்மீர் பிரச்னை குறித்தும் அதில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடு குறித்தும் இம்ரான் ஆலோசனை நடத்தினார். மேலும் பாகிஸ்தான்ஊடகங்களை மேற்கோள் காட்டி, காஷ்மீர் பிரச்சினையில் பழைய கோபத்தை இம்ரான் கான் மீண்டும் வெளிக்காட்டினார்.


latest tamil news



இந்நிலையில் இம்ரானுடனான முறையான சந்திப்புக்கு பின், டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். காஷ்மீர் குறித்து இம்ரான் கானுடன் கலந்துரையாடல் நடத்துவோம். எங்களால் உதவ முடிந்தால் நிச்சயமாக உதவுவோம். பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது. இரு நாடுகளும் இன்று இருப்பதைப் போல ஒருபோதும் நெருக்கமாக இல்லை. இம்ரான் எனது நண்பர். அவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பிரதமர் மோடியிடம், நடந்துவரும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசுவேன். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து இம்ரான் பேசுகையில், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பிராந்தியத்தில் பாக்., என்றும் அமைதியை விரும்புகிறது. ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து டிரம்புடன் பேசுவதாக இம்ரான் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
22-ஜன-202011:54:38 IST Report Abuse
HSR காஷ்மீர் எங்க நாட்டு பிரச்சினை. அதை பத்தி நீங்க ஏண் பேசி டைம் வேஸ்ட் பண்றீங்க. செரி செரி மோடி வர்றாரு.. வேற எதனா பேசி சமாளிங்க.. கோவக்கார மனுஷன்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
22-ஜன-202011:28:53 IST Report Abuse
Anand ஏற்கனவே பித்தம் தலைக்கு ஏறிய நிலையில் உள்ள ட்ரம்பிற்கு, கூத்தில் கோமாளி புகுந்தது போல இந்த இம்ரான் அடிக்கடி...
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
22-ஜன-202009:49:24 IST Report Abuse
dinesh அமெரிக்கா காஷ்மீரை எங்களிடம் விட்டால் நாங்கள் ஆப்கானிஸ்தானை விட்டுக்கொடுக்கிறோம்னு இம்ரான் டீல் பேசுறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X