'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (2)
Advertisement
Iran,Ukraine,airliner,two_missiles,shot,உக்ரைன்,ஏவுகணை

டெஹ்ரான் : உக்ரைன் பயணிகள் விமானத்தை, இரு ஏவுகணைகள் மூலம் தகர்த்ததாக, ஈரான் விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

இம்மாத துவக்கத்தில், ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம், நடுவானில் வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் பயணம் செய்த, 176 பேரும் உயிரிழந்தனர்.'ஈரான் ராணுவம் தான் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது' என, அமெரிக்கா கூறியது. முதலில் இதை மறுத்த ஈரான், பின், தவறுதலாக சுட்டு விட்டதாக தெரிவித்தது.





இந்நிலையில், அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் வலைதளத்தில், உக்ரைன் விமானம், இரு ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 'வீடியோ' காட்சி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று ஈரான் விமான போக்குவரத்து ஆணையம், அதன் வலைதளத்தில் உக்ரைன் விமான தகர்ப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அதில் 'புலன் விசாரணையில் உக்ரைன் விமானம், இரு 'டோர்-எம்ஐ' ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது தெரியவந்துள்ளது'என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரான் புரட்சி காவல் படையின் விமான படை தளபதி அமிரலி ஹஜிஸாடே, உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு முழு பொறுப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார். எனினும், ஏவுகணையை இயக்கியவர், தன்னுடைய உத்தரவின்றி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-ஜன-202007:45:30 IST Report Abuse
Natarajan Ramanathan மூர்க்கனுக்கு என்றுமே புத்தி மட்டுதான்...
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஜன-202005:51:30 IST Report Abuse
 Muruga Vel ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X