கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (8)
Advertisement
PRESS,HighCourt,fake,பிரஸ்,மிரட்டல்

சென்னை: 'பத்திரிகையாளர் எனக்கூறி, மிரட்டல் விடுப்பவர்களின் உண்மை தன்மையை ஆராய, சிறப்பு குழு அமைக்கப்படும்' என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிலை திருட்டு வழக்குகளில், பொய்யான தகவலை, தனி அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்.சேகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். பத்திரிகையாளர் என குறிப்பிட்டு, இம்மனுவை தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.


அடையாள அட்டை:


அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அடையாள அட்டைகளில், சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது.இதுகுறித்து, நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர். காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி வந்தது என, மனுதாரர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். பத்திரிகையாளர் எனக்கூறி, குற்றச் செயல்களில் பலர் ஈடுபடுவதாகவும், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களை பிளாக்மெயில் செய்வதாகவும் வரும் புகார்கள் குறித்தும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.





இவ்வழக்கில், செய்தி துறை செயலர், பிரஸ் கவுன்சில், சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சென்னை பிரஸ் கிளப் ஆகியோரை சேர்த்து, சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் மனோகரன் ஆஜராகி, அடுத்த விசாரணையின் போது, பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

பத்திரிகைகள், இதழ்கள் விற்பனை விபரங்களை, 'ஆடிட் பியூரோ' தான் அளிக்க முடியும் என்பதால், இவ்வழக்கில் அதையும் சேர்த்து, பதில் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். போலி பத்திரிகையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்களை, வெவ்வேறு மாவட்டங்களில் சேகரிப்பதால், அதை தாக்கல் செய்ய, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் அவகாசம் கோரினார்.


விற்பனை விவரம்:


இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பத்திரிகையாளர்கள் எனக்கூறி, அரசு அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் மிரட்டுவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்பதில் திருப்தி அடைந்தால், அவர்கள் சார்ந்துள்ள பத்திரிகை, இதழ்களின் விற்பனை, வருமான வரி செலுத்திய விபரம், சொத்து விபரங்கள் குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு குழு அமைக்கப்படும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில், தங்களை இணைத்து கொள்ள அனுமதி கோரி, பத்திரிகையாளர்கள் சிலர் தாக்கல் செய்த மனுக்களையும், நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர். இவ்வழக்கு விசாரணை, பிப்.,5 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
24-ஜன-202015:25:01 IST Report Abuse
Tamilachi ஒண்ணுக்கும் உதவாத கருப்பு சட்டை கூட்டமும் திருமா கூட்டமும் செய்யும் வேலை இது அதே போல் வழக்கறிஞர் படிப்பு முழுதாக தொட்டு கூட பார்க்காத இந்த கூட்டத்தின் ரௌடிகள் தங்கள் வண்டிகளில் வழக்கறிஞர் முத்திரையை ஒட்டி வைத்து காவலர்களுக்கு பயத்தை உண்டு பண்ண செய்கின்றனர் ...உண்மையான தொழில் பக்தி, செய்தியாளர் நேர்மை என்ற வட்டத்தில் வாழும் எனது நிருபரும் இப்படி செய்வதில்லை..
Rate this:
Share this comment
Cancel
venkat -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-202013:31:30 IST Report Abuse
venkat இது போல police என்று கார்களின் முன்னும் பின்னும் எதற்க்காக எழுத வேண்டும் என்று தெரியவில்லை.ஒருவேளை அப்பாவி மக்களுக்கு பயம் கிளப்பவோ, அல்லது no parking இடத்தில் தங்கள் வாகனத்தை நிறுதவோ? கடவுளு க்குத்தான் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
22-ஜன-202012:15:39 IST Report Abuse
konanki அரசாங்கம் நிர்வாகம் எப்படி செய்ய வேண்டும் என்று நீட்டி முழக்கம் செய்யும் ஊடகங்கள் தங்கள் துறையில் உள்ள இது போன்ற அக்கிரமங்களை களய முன் வருமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X