பொது செய்தி

இந்தியா

நிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்பிலானஓவியங்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் கைப்பைகள் ஆகியவை, ஏலத்தில் விற்பனைசெய்யப்பட உள்ளன.






மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், 14,000 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றனர். இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கி இருந்த நிரவ் மோடியை, அந்நாட்டு போலீசார், கடந்த ஆண்டு கைது செய்து, லண்டன் சிறையில் அடைத்துள்ளனர்.அவரை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களை, அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.





அதில், சில குறிப்பிட்ட ஆடம்பர பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த, 'சாப்ரன் ஆர்ட்ஸ்' என்ற, பிரபல ஏல நிறுவனத்திடம், அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், அடுத்த மாதம் 27ல், மும்பையிலும், மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில், 'ஆன்லைன்' முறையிலும் நடைபெற உள்ளன. இதில், ஓவியர்கள்அம்ரிதா ஷெர்கில், எம்.எப்.ஹுசைன், வி.எஸ்.கைதுன்தே ஆகியோரது ஓவியங்கள் ஏலம் விடப்பட உள்ளன. இவை, ரூ.12 கோடி முதல் ரூ.79 கோடி வரை ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





மேலும், நிரவ் மோடி பயன்படுத்திய, சர்வதேச அளவில் புகழ் பெற்ற சொகுசு கைக்கடிகாரங்கள், கைப்பைகளும், ஏலம் விடப்படவுள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
22-ஜன-202008:54:08 IST Report Abuse
Ramachandran Rajagopal ஆயிரக் கணக்கான கோடிகள் தனி நபர்களுக்கு கடன்கொடுத்து தப்பிச்ச செல்ல விட்டுவிட்டு சொத்துக்களை பரிமுதல் செய்துள்ளதாகவும் ஏலம் விடுவதாகவும் நாடகம் நடத்துகின்றனர் இந்நாட்டில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X