பொது செய்தி

இந்தியா

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் முரணான பதில்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி : 'ஜே.என்.யு., பல்கலைக் கழகத்தின், 'சர்வர்' அறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு இயந்திரங்கள் ஆகியவை, ஜனவரி முதல் வாரத்தில் சூறையாடப்படவில்லை' என, பல்கலை நிர்வாகம் அளித்துள்ள பதில், சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.






டில்லியில் உள்ள, ஜே.என்.யு., எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், கடந்த, 5ம் தேதி மாலை, முகமூடி அணிந்த சில மர்ம நபர் கள் நுழைந்து, மாணவர்களையும், ஆசிரியர்களையும், இரும்பு தடியால் தாக்கினர். அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த விவகாரம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜே.என்.யு., நிர்வாகம் போலீசில் அளித்த முதல் தகவல் அறிக்கையில், 'ஜனவரி, 3ம் தேதியன்று, முகமூடி அணிந்த சில மாணவர்கள், பல்கலையின் சி.ஐ.எஸ்., எனப்படும், தகவல் தொடர்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மின் இணைப்பை துண்டித்தனர்.'இதனால், சர்வர்கள் செயலிழந்தன. கண்காணிப்பு கேமராக்கள், பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரம் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன' என, குறிப்பிடப்பட்டுள்ளது.





இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, சவுரவ் தாஸ் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனு மீது, பல்கலை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
அதன் விபரம்:மற்றபடி, பல்கலையின் கண்காணிப்பு கேமராக்கள், பயோமெட்ரிக் கருவிகள் எதுவும், கடந்த மாதம் 30 முதல் ஜனவரி, 8 வரையிலான காலகட்டத்தில், சூறையாடப்பட வில்லை. மேலும், கண்காணிப்பு கேமராக்களின் சர்வர்கள் அனைத்தும், தகவல் தொடர்பு நிலையத்தில் இல்லை. அவை, 'டேட்டா சென்டர்' எனப்படும் தகவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பல்கலை நிர்வாகத்தின் இந்த பதிலுக்கும், போலீசில் அளித்த புகாருக்கும் நிறைய முரண்பாடு இருப்பதால், இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






நீதிமன்றம் சென்றது மாணவர் சங்கம்!

ஜே.என்.யு., பல்கலைக் கழக விடுதி கட்டணம், சமீபத்தில் உயர்த்தப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடைபெற்ற பல்கலை மற்றும் விடுதிகளுக்கு இடையிலான நிர்வாகக் கூட்டத்தில், விடுதி கட்டணத்தை உயர்த்த வழி செய்யும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, ஜே.என்.யு., மாணவர் சங்கம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-202015:43:12 IST Report Abuse
தமிழ்வேல் மாணவர்கள் எல்லாவற்றையும் முதல்நாள் மாலையில் அடித்து நொறுக்கி விட்டதாகவும், அதற்காக மறுநாள், "" முகமூடி அனிந்த தேச பக்தர்கள்"" உள்ளே நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினார்கள் என்றல்லவா பக்தால்ஸ் கள் கூறினவே 🤔
Rate this:
Share this comment
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
22-ஜன-202012:35:36 IST Report Abuse
S Regurathi Pandian JNU நிர்வாகம்தான் போராடிய மாணவர்கள் மீது அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவி மீது சர்வர் அறையை தாக்கி உடைத்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளனர். தற்போது அவர்கள்தான் எதுவும் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்கும் மாணவர் சங்கத்திற்கும் என்ன சம்பந்தம். ஆனால் இங்கே ஜெ.என்.யு என்றாலே தேச விரோதிகள் என்பது போன்று அவதூறு பரப்புவது நியாயமல்ல. பொய்யான குற்றச்சாட்டு அளித்த துணைவேந்தர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-202015:44:23 IST Report Abuse
தமிழ்வேல் அந்த "" 37 முகமூடி அனிந்த தேச பக்தர்கள்"" இன்னும் வெளியேதான் சுற்றுகின்றார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
22-ஜன-202011:58:02 IST Report Abuse
Ramalingam Shanmugam முழுவதும் பொய்யில் இயங்கும் தேசவிரோதிகளின் கூடாரம்தான் இந்த jnu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X