ரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (30)
Advertisement

பரேலி : உத்தர பிரதேசத்தில், 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், ஆத்திரம்அடைந்த, வி.ஏ.ஓ., வழங்கிய பிறப்பு சான்றிதழ்களில், இரண்டு குழந்தை களின் தற்போதைய வயது, 102 மற்றும் 104 ஆக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, பரேலி மாவட்டம் பேலா கிராமத்தை சேர்ந்த பவன் குமார், தன் மகன்கள், சுப், 4,சங்கெட், 2, இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் கேட்டு, இரு மாதங்களுக்கு முன், இணையத்தில் விண்ணப்பித்தார். இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க, வி.ஏ.ஓ., சுஷில் சந்த் அக்னிஹோத்ரி, கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர், பவன்குமாரிடம், 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க பவன்குமார் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த, வி.ஏ.ஓ.,வும் கிராம தலைவரும், குழந்தைகளின் பிறந்த வருடத்தை, தங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து, பிறப்பு சான்றிதழ் அளித்து உள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள சான்றிதழில், ஜூன், 13, 2016 என்ற, சுப்பின் பிறந்த தேதி, ஜன., 6, 1918 என்றும், ஜன., 6, 2018 என்ற, சங்கெட்டின் பிறந்த தேதி, ஜூன், 13, 1916 என்றும் குறிப்பிடப்பட்டுஉள்ளது. அவர்கள் வழங்கிய பிறப்பு சான்றிதழ்களின் அடிப்படையில், குழந்தைகளின் தற்போதைய வயது, 104 மற்றும் 102 ஆகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவன் குமார்,நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முடிவில், கோர்ட் உத்தரவின் கீழ், வி.ஏ.ஓ., மற்றும் கிராம தலைவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202017:01:44 IST Report Abuse
Malick Raja ஊழலின் ஊற்றுக்கண் அரசியல் கட்சிகள் பெரும் நிதி என்பது உலகறிந்த உண்மை .. இதை தடுக்கவே முடியாது அதுவரை ஊழலும் தொடரும் ..லட்சணம் இப்படி இருக்க CAA..NPR.. கண்றாவிகள் எல்லாம் வந்தால் ஊழல் தெளிவாக நடக்கவே வாய்ப்பாகும் .. ஆகவே நாடாளும் தகுதியை இந்தியர்கள் பெறுவது கடினம் என்று ஒரு ஆங்கிலேயன் சொன்னது உண்மையாகிவிட்டது .. அதிலும் குறிப்பாக ஆங்கிலேயன் சொன்ன உதாரணம் .. ஆங்கிலேயன் காலத்தில் ஒரு ரூபாயும் ஒரு பிரிட்டிஷ் பவுண்டும் இணையாக இருந்தது.. இப்போது நம்மவர்கள் ஒழுங்காக ஆண்டிருந்தால் ஒரு ரூபாய்க்கு இரண்டு பவுண்டு இருந்திருக்கவேண்டும் .குறைந்த பட்சம் இணையாகவாவது இருந்திருக்கவேண்டும் இன்று 200.ரூபாய்க்கு ஒரு பவுண்டு ஆக இருக்கிறதே .. ஆட்சியாளர்கள் வெட்கப்படவேண்டும் .. ஓகோ நம்நாட்டில் வெட்கத்தை உதிர்த்த பின்புதான் ஆட்சியாளர்களாக வருவார்கள் .. ஆக ஆங்கிலேயன் சொன்னது சரியாக இருக்கிறது .. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற சிறப்புடன் இருப்பது ஆட்சியாளர்களுக்கு கவுரவமாக இருப்பதும் உண்மைதானோ
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-ஜன-202018:07:05 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஒழுங்காகக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் இவர்கள் விரும்பும் நட்சத்திரத்தில் பிறந்ததாகவே சான்றிதழ் கிடைத்திருக்கும்.இதுக்குத்தான் அரசு ஊழியர்களுடன் மோதல்போக்கை வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வது? எங்க ஊருக்கு வந்து பாருங்க இந்த மாதிரி இடங்களில் சட்டப்பாயிண்டு பேசும் ஆட்கள்கூட கமுக்கமாகக் காரியத்தை முடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-202015:49:42 IST Report Abuse
தமிழ்வேல் நேரில் கண்டது... குமாஸ்தா "அடுத்தவாரம் வந்துபார்" என்கிறார். ஒரு (ஏழை, விவசாயி) தனது பையனை பள்ளியில் சேர்க்க பதிவு ஒன்று எடுக்க பல நாட்களாக வேலையை விட்டுவிட்டு அலைவது தெரிந்தது.. அவர் கூறியது "அந்த பதிவை நீங்க ளே வச்சிக்கோங்க சாமி, அவன் வயல் வேலைக்கே போவட்டும்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X