சயீப் அலி கானிடம் பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (35)
Advertisement
BJP,MP,MeenakshiLekhi,Taimur,Tanhaji,Saif,SaifAliKhan,  பாஜ, எம்பி, மீனாக்ஷிலேகி,தன்ஹாஜி

புதுடில்லி: 'வரலாறை நம்ப மாட்டேன் எனக் கூறிய நடிகர் சயீப் அலி கான், தன் மகனுக்கு, தைமூர் என பெயர் வைத்தது ஏன்?'' என, பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.


எதிர்ப்பு:


பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், தன்ஹாஜி என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார். மஹாராஷ்டிராவில் வசித்த, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதை இது. இந்த படம், சமீபத்தில் வெளியானது. இது குறித்த விளம்பர நிகழ்ச்சியில் பேசிய சயீப் அலி கான், 'தன்ஹாஜி பற்றிய விஷயத்தை வரலாறாக நான் கருதவில்லை. 'இந்தியா என்ற கருத்தாக்கமே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வந்ததற்கு பின் தோன்றியது தான்' என கூறியிருந்தார். இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.





இந்நிலையில், பா.ஜ., வைச் சேர்ந்தவரும், எம்.பி.,யுமான மீனாக் ஷி லேகி, இது குறித்து கூறியதாவது: துருக்கியை சேர்ந்தவர்கள் கூட, தைமூரை, கொடுங்கோல் அரசன் என்கின்றனர். ஆனால், வரலாறை நம்பாதவர்கள், தன் மகனுக்கு தைமூர் என பெயர் சூட்டியது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


கொடுங்கோல் ஆட்சி:


துருக்கியை சேர்ந்த தைமூர் என்ற அரசன், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவன். இந்தியா மீது படையெடுத்து, டில்லியை கைப்பற்றினான். அப்போது, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்களின் தலைகளை வெட்டி வீழ்த்தி, கொடுங்கோல் ஆட்சி புரிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தைத் தான், மீனாக் ஷி லேகி, மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
22-ஜன-202020:23:34 IST Report Abuse
Charles வாசகர் கூறியது போல் இந்துஸ்தான் அல்லது பாரத் என்ற பெயர் தான் நம் நாட்டுக்கு இருக்க வேண்டும். ஆங்கிலேயர் அல்லது முகமதியர்கள் வைத்த பெயரை நீக்கவேண்டும் இதையும் பிஜேபி செய்யும் என்று நம்புகிறேன்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
22-ஜன-202019:02:53 IST Report Abuse
 N.Purushothaman மஹா பாரதம் வெள்ளையன் வந்த பெறவு தான் வந்துச்சா ? தர்ப்பணம் செய்யறப்போ பாரத வருஷே , பரத கண்டேன்னு வருவது எல்லாம் வெள்ளைக்காரன் வந்த பின்பு தான் வந்துச்சா ? உங்களுக்கு பா.ஜ மேல ஆத்திரம் இருக்கலாம் ...ஆனால் சனாதனத்தின் மேல் ஆத்திரம் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜன-202017:12:09 IST Report Abuse
Endrum Indian இந்தியாவை இந்துஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யுங்கள் எல்லா நல்ல விஷயம் நடக்க ஆரம்பித்து பச்சை முதல் பாவாடை வரை எல்லோரும் டாட்டா பய் பய் என்று சொல்லி சென்று விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X