பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கியின் துணிச்சல் முடிவு

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (8)
Advertisement
RBI,ReserveBank,ரிசர்வ்வங்கி

இந்த செய்தியை கேட்க

மும்பை : ரிசர்வ் வங்கி, அதன் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை, பொதுவெளியில் தெரிவிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்கும் வகையில், இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இது போன்ற தகவல்களை கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாத நிலையை உருவாக்குவதற்காகவும், இந்த முயற்சியை, ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கிறது. இந்த முயற்சியின் ஆரம்பமாக, கடந்த ஆண்டு அக்டோபரில், சண்டிகரில் நடைபெற்ற, வங்கி இயக்குனர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.





இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: ரிசர்வ் வங்கி, பல ஆண்டுகளாக அதன் செயல்பாடுகள் தொடர்பாக, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, நிர்வாக குழு கூட்டங்களின் முடிவுகள் குறித்த தகவல்களை, ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202013:28:22 IST Report Abuse
Malick Raja ரிசர்வ் வங்கி துணிச்சல் . பணவீக்கம் அதிகரிப்பு ..வளர்ச்சியில் வீழ்ச்சி .. பொருளாதார நிலை 5%.க்கு வருமளவுக்கு இருக்கிறது இனி முழுக்க நனைத்த பின் முக்காடு எதற்கு என்ற தமிழனை சொல்லகராதிக்கு வேலை வந்துவிட்டது
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
22-ஜன-202020:05:23 IST Report Abuse
raja முதலில் பொருளாதாரம் தெரிந்தவரை கவர்னர் ஆக்குங்கள். அல்லது இப்படி தான் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-202014:19:26 IST Report Abuse
தமிழ்வேல் ஓகே.. ரொம்ப நல்லது. முதல் வேலையா, வங்கியில் கடன் வாங்கிட்டு திரும்பத்தராதவன் லிஸ்டை வெளியிடுங்க. அதுக்கப்புறம் நம்புறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X